இந்தியாவில் "ஆப்பிள் ஸ்டோர்ஸ்" பெரிய விஷயம்... ஏன் தெரியுமா?
இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் மும்பையில் திறக்கப்பட்டுள்ளது.
மும்பையின் பிகேசியில் (BKC) உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் ஆப்பிளின் ஒரு முதன்மை சில்லறை விற்பனை நிலையமானது செவ்வாய்கிழமை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 20 ஆம் தேதி டெல்லியின் சாகேட் பகுதியில் ஆப்பிளின் மற்றுமொரு ஸ்டோர் திறக்கப்படவுள்ளது. இரண்டு நாட்களில் இரண்டு ஆப்பிள் ஸ்டோர்கள் திறக்கப்பட்டுள்ள இந்தச் சூழலானது ஆப்பிள் ஸ்டோர்களுக்கான சந்தையாக இயங்கும் விஷயத்தில் இந்தியா எவ்வளவு முக்கியமானதாக மாறியுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஆப்பிள் ஸ்டோர் ஏன் முக்கியமானது?
சிங்கிள் பிராண்ட் சில்லறை விற்பனை தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தால் இந்தியாவில் ஒரு கடையைத் திறக்க முடியவில்லை. இதுவரை, இது இமேஜின் மற்றும் ஃபியூச்சர் வேர்ல்ட் போன்ற இந்திய கூட்டாளர்களால் இயக்கப்படும் கடைகளைக் கொண்டிருந்தது. அதன் முதல் இரண்டு ஸ்டோர்களை அறிமுகப்படுத்தியவுடன், ஆப்பிள் இந்தியாவில் முழு ஸ்டாக் பிளேயராக மாறும், உற்பத்தி முதல் சில்லறை விற்பனை வரை அனைத்தையும் நிர்வகிக்கும்.
திங்களன்று, அதன் டெவலப்பர் நெட்வொர்க்குடன் "இந்தியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான வேலைகளை ஆதரிப்பதாகவும்" கூறியது.
புதிய நிறுவனத்திற்குச் சொந்தமான கடைகளில், இந்திய வாடிக்கையாளர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை வாங்க முடியும், இந்தியாவைப் பொறுத்தவரை இது இந்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்தின் 25 ஆண்டு பயணத்தை கோடிட்டுக் காட்டுகிறது.
ஆப்பிள் ஸ்டோர்கள் எவ்வாறு வேறுபடுகின்றன?
புதிய ஆப்பிள் ஸ்டோர்களில், நிறுவனம் தயாரிப்புகளின் உண்மையான விற்பனை நோக்கத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வாடிக்கையாளர்களின் அனுபவத்தில் கவனம் செலுத்துவதை முக்கியமானதாகக் கருதுகிறது.சிட்டி செண்டர்களைப் போல, மக்கள் ஆப்பிள் ஸ்டோர்களின் உள்ளே சென்று தயாரிப்புகளுடன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவிடலாம் என்பதோடு தங்களுக்கும் ஆப்பிள் தயாரிப்புகள் குறித்து உதிக்கும் பல்வேறு கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் ஐபோன் மற்றும் மேக்புக்கை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் அறியலாம்.
ஒவ்வொரு கடையிலும் பல ஆப்பிள் மேதைகள் உள்ளனர், அவர்கள் வாடிக்கையாளர்களைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குகிறார்கள். எதை வாங்கலாம் எனும் முடிவை எடுப்பதற்கும் அவர்கள் உதவுகிறார்கள். கடைகளை வேறுபடுத்தும் மற்றொரு புதிய அம்சமும் ஆப்பிள் ஸ்டோர்களில் உள்ளன. அது என்னவென்றால், இந்திய ஆப்பிள் ஸ்டோர்களில் விற்பனை புள்ளி அல்லது வரிசைகளுடன் பில்லிங் கவுண்டர்கள் இல்லை. இந்த மேதைகள் வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் விற்பனையை பதிவு செய்கிறார்கள். ஆப்பிள் தயாரிப்புகளின் பல்வேறு அம்சங்களைப் பயன்படுத்த வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க முயற்சிக்கும் நிபுணர்களுடன் வழக்கமான இன்றைய ஆப்பிள் அமர்வுகள் உள்ளன. இந்த கடைகளில் ஆப்பிள் தயாரிப்புகள் மற்றும் துணைக்கருவிகளின் முழு தொகுப்பும் விற்பனைக்கு வைக்கப்படும்.
முதல் ஆப்பிள் ஸ்டோர் எப்போது திறக்கப்பட்டது?
முதல் ஆப்பிள் ஸ்டோர் மெக்லீன், வர்ஜீனியாவில் உள்ள டைசன்ஸ் கார்னர் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள க்ளெண்டேல் கேலேரியாவில் 2001 இல் திறக்கப்பட்டது. இந்த நடவடிக்கை பல உந்துதல்களுக்கு உட்பட்டது, மேலும் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் சில்லறை விற்பனையில் ஈடுபடும் முயற்சிக்காக விமர்சிக்கப்பட்டார். ஆனால், தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை அவர் எதிர்த்தார்: "மெகாஹெர்ட்ஸ் மற்றும் மெகாபைட்களைப் பற்றி கேட்பதற்குப் பதிலாக, வாடிக்கையாளர்கள் இப்போது கணினி மூலம் தாங்கள் செய்யக்கூடிய திரைப்படங்களை உருவாக்குதல், பழைய முறையிலான தனிப்பயன் இசை குறுந்தகடுகளை எரித்தல் (CD) மற்றும் அவர்களின் டிஜிட்டல் புகைப்படங்களை தனிப்பட்ட இணையதளத்தில் வெளியிடுதல் போன்ற விஷயங்களைக் கற்று அனுபவிக்க முடியும்." என்று அவர் வாதிட்டார்.
இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, இன்று ஆப்பிள் உலகெங்கிலும் 500 ஸ்டோர்களைக் கொண்டுள்ளது, பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு பிராண்டின் தனித்துவமான மதிப்பைக் காட்டுகிறது. கடந்து வந்த இத்தனை ஆண்டுகளில், இந்த கடைகளில் சில, பாரிஸில் உள்ள Carrousel du Louvre அல்லது நியூயார்க்கில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினலில் உள்ள ஒரு கடை போன்று நகரின் சின்னங்களாக அடையாளம் காட்டத்தக்கதொரு பெருமிதத்தை அடைந்து விட்டன எனலாம்.