ஷாப்பிங் போறீங்களா? பெங்களூரின் எம்.ஜி ரோடுதான் பெஸ்ட் சாய்ஸ்!

ஷாப்பிங் போறீங்களா? பெங்களூரின் எம்.ஜி ரோடுதான் பெஸ்ட் சாய்ஸ்!

இந்தியாவில் ஷாப்பிங் என்றால் அது பெங்களூர் எம்.ஜி ரோடு ஷாப்பிங்தான் என்கிறார்கள், மில்லினியத்து மக்கள். பெங்களூர் மாநகரின் ஷாப்பிங் செல்வது நாடு முழுவதுமுள்ள மிடில் கிளாஸ் மக்களின் கனவாகவே இருந்து வருகிறது. பெங்களூருக்கு அடுத்த இடம், ஹைதராபாத்க்கு கிடைத்திருக்கிறது.

பெங்களூரின் எம்.ஜி ரோடு ஷாப்பிங் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகவே பிரபலமாகவே இருந்திருக்கிறது. 70, 80களில் பிரபலமான இடமான எம்.ஜி ரோடு மில்லினியத்தில் பிறந்தவர்களுக்கும் பிடித்தமான இடமாகியிருக்கிறது. பெங்களூருக்கு அடுத்த இடத்தை ஹைதராபாத்தின் சோமாஜிகுடா பகுதி பெற்றிருக்கிறது. எம்.ஜி.ரோடுக்கு அடுத்தபடியாக இங்குதான் ஷாப்பிங் செல்ல மக்கள் விரும்புகிறார்கள்.

இந்தியாவின் முக்கிய நகரங்களின் நில மதிப்பு, ஷாப்பிங் செய்வதில் மக்கள் காட்டு ஆர்வம் உள்ளிட்ட விஷயங்களை முன்வைத்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறது. அதில் பல்வேறு விஷயங்களில் பெங்களூரு மாநகரம் முதலிடத்தில் இருக்கிறது.

இந்தியாவின் டாப் 10 பிரபலமான தெருக்களில் 4 தெருக்கள் பெங்களூர் நகரத்தைச் சேர்ந்ததாக இருக்கிறது. பார்க்கிங் வசதி, பொதுமக்கள் வந்து செல்லும் வசதி, மக்களின் வாங்கும் திறனைப் பொறுத்து இந்தியாவில் உள்ள பிரபலமான தெருக்களை வகைப்படுத்தியிருக்கிறார்கள். அதில் வழக்கம் போல் பெங்களூர் முதலிடத்தை பெற்றிருக்கிறது.

டாப் 5 இடங்களில் பெங்களூரின் எம்.ஜி ரோடு, ஹைதராபாத்தின் சோமாஜிகுடா தவிர மூன்றாமிடத்தில் மும்பையின் லிங்கிங் சாலையும், டெல்லியின் சவுத் எக்ஸ்டென்ஷன், கொல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட் உள்ளிட்டவையும் இருக்கின்றன. இவை நில மதிப்பைப் பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நில மதிப்பைப் பொறுத்தவரை டெல்லியின் கான் மார்க்கெட் முதலிடத்தில் இருக்கிறது. இங்கே ஒரு சதுர மீட்டர் இடத்தை மாத வாடகைக்கு எடுத்துக்கொள்ள 1500 ரூபாய் ஆகிறது. அதற்கு அடுத்த நிலையில் குருகிராம் நகரத்தின் டஎல்எப் கேலிரியாவும் மும்பையின் லிங்கிங் சாலையும் அதிக மதிப்பை பெற்றிருக்கின்றன.

ஆக, எந்த பட்டியலை எடுத்தாலும் சென்னை என்னும் பெயரை மட்டும் பார்க்க முடிவதில்லை. சென்னையில் உள்ள ஷாப்பிங் மால், தெருக்கள் பற்றிய குறைந்த பட்ச தகவல்கள் கூட நிறைய பேருக்குத் தெரியவில்லை. 400 ஆண்டுகள் பழமையான சென்னை மாநகரம், ஆனாலும் பெரிய அளவில் கொண்டாடப்படுவதில்லை.

90களில் ஐ.டி துறை வளர்ச்சியடைந்தபோது, பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்களின் தேர்வாக சென்னை இருந்தது. டைடல் பார்க் உருவாக்கப்பட்டது. அதற்கு பின்னரே ஐதராபாத் உள்ளிட்ட நகரங்கள் வளர்ச்சி கண்டன.

மில்லினியத்திற்கு பின்னர் சென்னை மாநகரத்தில் முக்கியத்துவம் படிப்படியாக சரிய ஆரம்பித்திருக்கிறது. தென்னிந்தியாவோ, வட இந்தியாவோ எந்தப் பகுதியாக இருந்தாலும் பெங்களூர் மாநகரம் அனைத்து விதமான கலாச்சார பின்னணி கொண்டவர்களுக்கும் விருப்பமான இடமாக இருந்து வருகிறது. சிங்காரச் சென்னையில் ஏதாவது செய்தாக வேண்டும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com