கருணாஸ்
கருணாஸ்

கருணாஸ் படத்தின் நாயகிக்கு பிடி வாரண்ட்!

Published on

 நடிகர் கருணாஸ் நடித்து பெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படம் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’. இந்த  திரைப்படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் மும்பை நடிகையான நவ்நீத் ரானா.

பின்னர் நவ்நீத் ரானா, மும்பை அமராவதி தொகுதிக்கான நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் இந்த தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதியான அமராவதியில் போட்டியிட நவ்நீத் ரானா போலி சான்றிதழ் பெற்றதாக மும்பை முல்லுண்டு காவல்நிலையத்தில் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை மும்பை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் நவ்நீத் ரானா மற்றும் அவரது தந்தை ஆஜராகவில்லை. அதையடுத்து மும்பை நீதிமன்றம் பலமுறை வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தது.

இந்நிலையில்  இந்த போலி சாதி சான்றிதழ் வழக்கில் சுயேச்சை எம்.பி. நவ்நீத் ரானாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com