ஆளுநர் தமிழிசை
ஆளுநர் தமிழிசை

புதுச்சேரியில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடங்கியது!

புதுச்சேரியில் 2023 – 24 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியுள்ளது . புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடங்க உள்ளது. முதல்வர் ரங்கசாமி வரும் 3 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

இன்று மார்ச் 9-ம் தேதி காலை 9.45 மணி முதல் புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன்பின் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதல் மார்ச் மாதத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதலமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்து வந்தார். புதுவையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வரை மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதன்பின்பு அந்த நடைமுறை மாறியது.

புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி 27ம் தேதி கூடிய திட்டக்குழு கூட்டத்தில், பட்ஜெட் தொகையாக 11 ஆயிரத்து 600 கோடி நிர்ணயித்து, மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

இன்று கூடவுள்ள புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் மார்ச் மாதம் முழுவதும் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது தொடர்பாக கூட்டத்தொடர் தொடங்கியதும் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும். இந்த கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து, மின்துறை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com