ஏடிஎம் இயந்திரம்
ஏடிஎம் இயந்திரம்

தங்கக் காசு எடுக்க ஏடிஎம் கருவி: ஐதராபாத்தில் அசத்தல்!

நாட்டில் முதன்முதலாக தங்கக் காசு வழங்கும் ஏடிஎம் இயந்திரம் ஐதராபாதில் துவங்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தை மையமாக கொண்டு இயங்கும் கோல்ட்சிக்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஓபன் கியூப் நிறுவனம் இரண்டு இணைந்து இந்த ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளன.

இதுகுறித்து அந்நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப் பட்டதாவது:

ஐதராபாத்தில் முதன்முதலாக பரிசோதனை முயற்சியாக இந்த ஏடிஎம் மெஷினை  நிறுவியுள்ளோம். பொதுமக்கள் எடிஎம் கருவியில் டெபிட் கார்டுகள் அல்லது கடன் அட்டைகளை செலுத்தி பணம் பெறுவது போல், இந்த கருவியிலும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலமாக தங்கக் காசுகளைப் பெறலாம்.

இந்த கருவியில் இப்போதைக்கு 5 கிலோ எடை கொண்ட தங்க நாணயங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில் 5 கிராம் முதல் 100 கிராம் வரையிலான  8 வகையான தங்க நாணயங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com