ஏ.டி ஆர். டு ஏர்பஸ் - எமர்ஜென்ஸி எக்ஸிட்!

ஏ.டி ஆர். டு ஏர்பஸ் - எமர்ஜென்ஸி எக்ஸிட்!

குறைந்த தூறம் செல்லும் விமானங்களை ATR எனக்கூறுவர். இவற்றில் பயணிப்பவர்கள் பிடிக்கிற கம்பி என நினைத்து, எமர்ஜென்ஸி கதவில் கை வைப்பது சகஜம். அத்துடன் அவை எளிதில் திறந்துவிடும் என்பதும் உண்மை.

சூர்யா பயணம் செய்த திருச்சிராப்பள்ளி பயண விமானமும் ATR இண்டிகோதான்.

இத்தகைய ATR விமானங்களில், கைப்பிடி தலைக்கு மேல் இருக்கும். அதனை மறைத்து எதுவும் இருக்காது. ஆக, சமயங்களில் கார், பஸ்களில் எழ… அல்லது வெளியே செல்ல ஏதுவாய் உள்ள கைப்பிடி மாதிரிதான் இருக்கும்.

புதிதாக விமானத்தில் ஏறுபவர்கள், இதனைப் பிடி என நினைத்து தெரியாமல் பிடித்து விடக்கூடும். மேலும், அவர்கள் கொடுக்கும் அழுத்தத்திலேயே அது திறந்து விடவும் கூடும். சிலர் தெரியாமலும்,  மேலும் சிலர் ஒரு ஆர்வத்திலும் இயக்கிவிடக்கூடும். எமர்ஜென்ஸி கதவுக்கு பக்கத்தில் உள்ள இருக்கையில் கையை வைத்துக் கொள்ள கைப்பிடி இருக்காது. ஆக, சிலர் தெரியாமல் அதனைப் பிடித்துவிடும் வாய்ப்பு அதிகம்.

ஏர்பஸ்களில் எமர்ஜென்ஸி கதவை ஒட்டி ஒரு ப்ளேப் (Flap) மறைப்பான் இருக்கும். அதனை அகற்றினால்தான் எமர்ஜென்ஸி கதவையே தொடமுடியும். இதன் அமைப்பு விமானத்துக்கு விமானம் மாறுபடலாம்.

உண்மையில்  எமர்ஜென்ஸி வடிமைப்பே விமானத்துக்கு விமானம் மாறுபடும். ATRல் விங்ஸ் (wings)  மேலே இருக்கும். ஏர்பஸ்ஸில் அடியில் இருக்கும். ஆக எப்படி திறப்பது, பயணிகளை எப்படி வெளியேற்றுவது என்பதும் மாறுபடும்.

எமர்ஜென்ஸி கதவு ஏர்பஸ்ஸில் 15 கிலோ. இதன் அருகில் உள்ள இருக்கை வலுவானவருக்கே ஒதுக்கப்படும். குழந்தைகளுக்கு எமர்ஜென்ஸி கதவு இருக்கைகள் ஒதுக்கப்படுவதில்லை.

ATR விமானங்களில் எமர்ஜென்ஸி கதவுகளைக் கழட்டிவிடலாம். ஏர்பஸ்களில் இழுத்து மூடனும்.  எமர்ஜென்ஸி கதவுகள் நடுவானில் திறக்காது. காரணம் வெளி அழுத்தத்திற்கும் உள் அழுத்தத்திற்கும் உள்ள வேறுபாடுதான். இறங்கிய பிறகுதான் கதவுகள் திறக்கப்படும்.  எமர்ஜென்ஸி நிலையில் கூட, பயணிகள் திறக்க அனுமதியில்லை. கேப்டன் உத்தரவிட வேண்டும். மேலும், எதிர்பாராத விதமாக எமர்ஜென்ஸி கதவு திறந்து கொண்டால், அது அடுத்த விநாடியே கேப்டனுக்கு தெரியவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com