விமான நிலையம் அருகே 5ஜி கோபுரம் அமைக்கத் தடை!

5ஜி டவர்
5ஜி டவர்

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சேவையை கடந்த அக்டோபர் 1-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த வகையில் நாட்டின் குறிப்பிட்ட சில நகரங்களில் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை கோபுரங்கள் அமைக்கப்படக் கூடாது என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை கோபுரங்கள் அமைத்தால், ரேடார் உள்ளிட்ட விமான கருவிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. எனவே இப்பகுதிகளில் 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்க தடைவிதிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டதாவது;

விமான நிலையங்களின் ஓடுபாதையின் இருபுறங்களிலும் 2,100 மீட்டர் தூரத்திற்கும், ஓடுபாதையின் மத்திய பகுதியில் இருந்து 910 மீட்டர் தூரத்திற்கும் இடையே 3,300 முதல் 3,670 மெகா ஹெர்ட்ஸ் வரையிலான அலைவரிசையைக் கொண்ட 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்க தடை விதிக்கப் படுகிறது.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com