வங்கிக் கடன் மோசடி வழக்கு: சந்தா கோச்சார்,கணவர் தீபக் கைது

வங்கிக் கடன் மோசடி வழக்கு: சந்தா கோச்சார்,கணவர் தீபக் கைது

வங்கிக் கடன் முறைகேடு வழக்கு தொடர்பாக ஐ.சி.ஐ.சிஐ. வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் இருவரையும் சிபிஐ கைது செய்துள்ளது.

சந்தா கோச்சார் தமது பதவிக்காலத்தில் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுகள் மற்றும் ஐ.சி.ஐ.சி. வங்கியின் விதிமுறைகளுக்குப் புறம்பாக விடியோகான் குழு நிறுவனங்களுக்கு ரூ.1,875 கோடி கடனுக்கு ஒப்புதல் வழங்கியதாவும் இதற்கு பிரதிபலனாக சந்தா கோச்சார் கணவர் தீபக் நடத்திவரும் நிறுவனத்துக்கு சில கோடிகள் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்த்து.

இந்த கடன் திருப்பிச் செலுத்தப்படாமல் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டதால் வங்கிக்கு ரூ.1,730 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த முறைகேடுகள் தொடர்பாக சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் மற்றும் விடியோகான் நிறுவனத்தின் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நடந்த விசாரணையின்போது சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் இருவரும் சிபிஐ அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காத்துடன் விசாரணைக்கும் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இருவரையும் சிபிஐ கைது செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com