நெருக்கடியில் பி.பி.சி நிறுவனம்; அழுத்தம் தர ஆரம்பித்துள்ள பா.ஜ.க அரசு - பி.பி.சி நிறுவனம் செய்ய வேண்டியது என்ன?

நெருக்கடியில் பி.பி.சி நிறுவனம்; அழுத்தம் தர ஆரம்பித்துள்ள பா.ஜ.க அரசு - பி.பி.சி நிறுவனம் செய்ய வேண்டியது என்ன?

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி. ஊடக அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டார்கள். ஒரு பன்னாட்டு அலுவலகத்தின் இந்திய கிளை நிறுவனத்தில் விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்படுவது பலரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செல்போன்கள் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்துவிட்டு விசாரணை நடத்தி உள்ளனர். வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. நாளையும் சோதனை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.பி.சி நிறுவனத்தின் டாக்குமெண்டரி ஒரு மாத காலமாகவே விவாதப்பொருளாக இருந்தது. குஜராத் கலவரங்களில் மோடியை சம்பந்தப்படுத்திய டாக்குமெண்டரிக்கு பா.ஜ.க தரப்பு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியது. சர்வதேச சதி என்றும் இது பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் நீட்சி என்றெல்லாம் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்கள் பி.பி.சி நிறுவனத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்கள்.

பி.பி.சி என்னும் சர்வதேச அளவில் பிரபலமான, பல்வேறு நாடுகளின் நம்பிக்கையை பெற்ற செய்தி நிறுவனம். ஏதோ ஒரு நாட்டுக்கு எதிராக செய்தி வெளியிட வேண்டிய கட்டாயம் பி.பி.சி நிறுவனத்திற்கு இருந்திருக்கப் போவதில்லை. தன்னுடைய நடவடிக்கையில் உள்நோக்கமில்லை என்பதை நிறுவனத்தின் தரப்பில் விளக்கியிருக்கலாம்.

குஜராத் கலவரங்கள் தொடர்பான பி.பி.சி டாக்குமெண்டரியில் இந்திய ஊழியர்கள் பணியாற்றவில்லை என்று பி.பி.சி நிறுவனம் விளக்கம் தந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள ஊழியர்களை கலந்தாலோசிக்காமல், இந்தியாவில் கள ஆய்வு எதுவும் மேற்கொள்ளாமல் இந்தியா சம்பந்தப்பட்ட விஷயத்தை பி.பி.சி நிறுவனத்தால் எப்படி உருவாக்க முடிந்தது என்கிற கேள்வி எழுகிறது.

உலக அளவில் பிரபலமான ஒரு தலைவரின் மறுபக்கம், அவர்களது ஆரம்பகால வாழ்க்கையை பி.பி.சி நிறுவனம் ஏன் தோண்டியெடுக்கிறது. மோடி தவிர வேறு எவருக்கும் இதுபோல் சமீபத்தில் நிகழ்ந்திருக்கிறதா என்பதையும் தெளிவு படுத்தவேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, 2007ல் காங்கிரஸ் ஆட்சியின் போது ஆரம்பமான குஜராத் கலவரங்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று, 2013ல் மோடியை சம்பந்தப்படுத்தவதற்கான ஆதாரம் இல்லை என்று உச்சநீதின்றம் அறிவித்தது.

20 ஆண்டு காலத்திற்கு முன்னர் நடைபெற்ற ஒரு சம்பவத்தை இப்போது தோண்டியெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ஏன்? அன்றைய நிலை இன்றும் நீடிக்கிறது என்று பி.பி.சி நிறுவனம் நினைக்கிறதா?

பத்தாண்டுகளுக்கு முன்னர் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றி பி.பி.சி நிறுவனம் என்ன நினைக்கிறது? ஏகப்பட்ட கேள்விகள். இதற்கெல்லாம் பி.பி.சி டாக்குமெண்டரியில் பதில் சொல்லப்பட்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால், இது குறித்து பி.பி.சி நிறுவனம் விளக்கம் அளிப்பதுதான் சரியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com