ஆயிரம் கோடி வருமான வரி செலுத்தியுள்ள பிசிசிஐ: நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்!

ஆயிரம் கோடி வருமான வரி செலுத்தியுள்ள பிசிசிஐ: நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்!

பிசிசிஐ கடந்த நிதியாண்டில் இந்திய அரசுக்கு ஆயிரத்தி 154 கோடி ரூபாயை வருமான வரி செலுத்தியுள்ளது என்று ஒன்றிய நிதி இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கிரிக்கெட் மிக முக்கிய விளையாட்டாக உள்ளது. இந்திய மக்கள் கிரிக்கெட்டை விளையாட்டை அதிகளவு விரும்புவதால் கிரிக்கெட் மற்றும் அது சார்ந்த வர்த்தகம் மிகப்பெரிய வரி வருவாயாக இந்திய அரசுக்கு உள்ளது.இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ ஈட்டி உள்ள வருமானம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய நிதி துறை இணையமைச்சர் பங்கஜம் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில்.

இந்தியாவுடைய மிக முக்கிய விளையாட்டாக உள்ள கிரிக்கெடை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ வழி நடத்தி வருகிறது. பிசிசிஐ மூலம் இந்திய அரசுக்கு கிடைத்துள்ள வருவாய் ஆண்டுக்காண்டு உயர்ந்து வருகிறது. பிசிசிஐ குறிப்பாக 2017 -18 ஆம் நிதி ஆண்டுகளில் 596.63 கோடி வருமான வரி செலுத்தியுள்ளது. 18 - 19 ஆம் நிதி ஆண்டுகளில் 815.05 கோடியை வரியாக செலுத்தியுள்ளது.

அதனைத்தொடர்ந்து 19- 20 ஆம் ஆம் நிதியாண்டிகளில் 882.29 கோடி வரியை செலுத்தியுள்ளது. 20- 21 ஆம் நிதி ஆண்டுகளில் 844.92 கோடியை வருமான வரியாக செலுத்தியுள்ளது. குறிப்பாக 2021 - 22 ஆம் நிதியாண்டுகளில் பிசிசிஐ 7,606 கோடி வருமானமாக ஈட்டி உள்ளது. இதன் மூலம் இந்திய அரசுக்கு வருமான வரியாக 1,059 கோடி ரூபாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்பொழுது 37 சதவீதம் அதிகமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com