மும்பை ரோட்டில் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்த பில்கேட்ஸ்!

மும்பை ரோட்டில் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்த பில்கேட்ஸ்!

ந்தியாவுக்கு வருகை தந்துள்ள மைக்ரோ சாப்ட் நிறுவனரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் மற்றும் பிரபலங்களைச் சந்தித்து வருகிறார். அந்த வகையில், இந்தியாவின் முக்கியத் தொழிலதிபரான ஆனந்த் மகேந்திராவை இன்று சந்தித்தார். அப்போது பில்கேட்ஸ் மகேந்திரா நிறுவத்தின் மின்சார ஆட்டோ ஒன்றை மும்பையின் சாலையில் ஓட்டி மகிழ்ச்சி அடைந்தார். பில்கேட்ஸ் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்த அந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

இந்தப் பரபரப்பு வீடியோவை தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திரா தனது சமூக வலைத் தளங்களில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், 'இனி இது பில்கேட்ஸ் கார்…' இதை ஓட்டிப் பார்க்க உங்களுக்கு நேரம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த முறை பில்கேட்ஸ் இந்தியா வரும்போது சச்சின் டெண்டுல்கர் ஆகியோருடன் தான், 'ட்ரியோ ஆட்டோ ரிக் ஷா பந்தயத்தில் கலந்து கொள்ள விரும்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com