கோடியும் கோடீஸ்வரரும்!

மும்பை பரபர
கோடியும் கோடீஸ்வரரும்!

மும்பையின் முக்கியப் பகுதிகளில், பெரிய பெரிய பணக்காரர்கள்; திரையுலக பிரபலங்கள்; தொழில திபர்கள் வீடு வாங்குகின்றனர். இந்த வகையில், தெற்கு மும்பையில் கட்டப்பட்டு வரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ‘டிரிப்ளெக்ஸ்’ வீடு ஒன்று அதிகபட்ச மதிப்பாக 252 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொழிலதிபர் நீரஜ் பஜாஜ் மற்றும் லோதா குழுமத்தைச் சேர்ந்த மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

வீடு விற்பனையைப் பொருத்தவரை, நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மதிப்பிலான பரிவர்த்தனையாக இது கருதப்படுகிறது.

ராஜ்பவன் அருகே வால்கேஷ்வர் பகுதியில் 31 மாடிகள் கொண்ட லோதா மலபார் டவரில் மேலேயுள்ள 3 மாடிகளை நீரஜ் பஜாஜ் வாங்கி இருக்கிறார். ஒரு சதுர அடி 1.4 லட்சம் மதிப்பில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வரும் ஏப்ரல் முதல் பிரிவு 54ன் கீழ் முதலீடு செய்ய வேண்டிய மூலதன ஆதாயம் 10 கோடியென வரையறை செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் வரி செலுத்த வேண்டுமென்பதால், ஆடம்பர வீடுகளை இந்த மாதத்திலேயே வாங்க பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

நடக்கட்டும்! நடக்கட்டும்!

நோ ஆடம்பரம், நோ ஆர்ப்பாட்டம்! கோடீஸ்வரர் வீட்டு நிச்சயதார்த்தம்!

பெரிய தொழிலதிபர், கோடீஸ்வரர் வீட்டுக் குடும்பத்தில் சமீபத்தில் சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. மிகவும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

யார் அந்த கோடீஸ்வரர்?

என்ன சுபநிகழ்ச்சி?

பிஸினஸ் Tycoon கெளதம் அதானிதான் கோடீஸ்வரர். அவருடைய மகன் ஜீத் அதானிக்கும் வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவா ஜெய் மின் ஷாவிற்கும் நிச்சயதார்த்த சுப நிகழ்வு அதிக ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல்  (Low Key Cermony) நடத்தப்பட்டது.

ஜீத் அதானி தனது மேற்படிப்பை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் முடித்து 2019ஆம் ஆண்டு அதானி க்ரூப்பில் வைஸ் பிரசிடெண்ட் க்ரூப் ஃபைனான்ஸ் ஆக சேர்ந்துள்ளார். இவருடைய மூத்த சகோதரர் கரண் அதானி, பிரசித்தி பெற்ற வழக்கறிஞர் சிரில் ஷ்ராப் மகள் பரிதியை திருமணம் செய்துள்ளார்.

ஜீத் அதானியும் திவா ஜெய்மின் ஷாவும் வெளிநாட்டில் படிக்கையில் சந்திப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

‘அதானி – ஷின்டென்பர்க் ரோ’ (Adani – Hindenburg Row) வுக்குப் பின் அவர்கள் வீட்டில் நடந்த முக்கிய விழா இதுவாகும்.

“நல்லதே நடக்கட்டும்! வாழ்த்துவோம்!”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com