சிம்ம மாத பிறப்பு… சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சிம்ம மாத பிறப்பு… சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

ம் இந்துக் கோயில்களில் ஜாதி மத பேதமின்றி அனைத்து பக்தர்களாலும் விரும்பி வழிபடும் தெய்வமாகிறார் சபரிமலையில் வீற்றிருக்கும் சுவாமி ஐயப்பன். கடும் விரதங்களும் தூய மனதும் உடையவர்கள் மட்டுமே அந்த ஐயப்பனைக் காண பதினெட்டுப்படிகளில் ஏற முடியும். கேரளாவில் உள்ள இந்தக் கோயிலுக்கு ஆகமவிதிகளும் ஆசாரங்களும் தனித்துவமானது. அவ்வகையில் சிறப்பான நாட்களில் நிகழும் கோயில் நடை திறப்பும் ஒன்று.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி சிம்ம மாதம் எனப்படும் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோயில் நடையை திறந்து வைத்தார். நேற்று எந்த பூஜைகளும் நடைபெறாத நிலையில் இன்று லட்சார்ச்சனையுடன் துவங்கி  வருகிற 21ஆம் தேதி திங்கட்கிழமை வரை தினமும் கணபதி ஹோமம்,  உஷ பூஜை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். அது மட்டுமின்றி படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

இந்த 5 நாட்களும் நெய் அபிஷேகமும் நடைபெறும். கோயில் நடை திறந்திருக்கும் 5 நாட்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக, நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி ஆன்லைன் முன்பதிவு மையங்களும் நிறுவப்படுகின்றன.

சபரிமலையில் மாதாந்திர பூஜை முடிவடைந்து வருகிற 21ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட உள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்படுகிறது. திருவோணம் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு ஓணம் விருந்தும் வழங்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com