பிஸ்லெரியை வாங்கியது டாடா நிறுவனம்!

பிஸ்லெரியை வாங்கியது டாடா நிறுவனம்!

பிஸ்லெரி தண்ணீர் பாட்டில் நிறுவனத்தை டாடா நிறுவனம் 7,000 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

பிஸ்லெரி  நிறுவனம் ஏற்கனவே தமது தயாரிப்புகளான தம்ஸ் அப், கோல்ட் ஸ்பாட் மற்றும் லிம்கா போன்ற குளிர்பான பிராண்டுகளை கோகோ கோலா நிறுவனத்துக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே விற்பனை செய்தது. இந்நிலையில் தற்போது, பிஸ்லெரி பேக்கேஜ்டு வாட்டர் நிறுவனத்தை டாடா நிறுவனத்துக்கு 7,000 கோடி ரூபாய்கு விற்பனை செய்துள்ளது.

டாடா மற்றும் பிஸ்லெரி இடையே தற்போது போடப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தற்போது உள்ள நிர்வாக குழுவே நிறுவனத்தை நிர்வாகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிஸ்லெரி நிறுவனத் தலைவர் செளஹான் தெரிவித்ததாவது;

நாட்டின் மிகப்பெரிய பேக்கேஜ்டு வாட்டர் நிறுவனமான பிஸ்லெரியை அடுத்தக்கட்ட விரிவாக்கத்துக்கு கொண்டு செல்ல, என் குடும்பத்தில் யாருக்கும் விருப்பமில்லை. எனக்கும் பிசினஸை கவனிக்கும் அளவுக்கு உடல்நிலை இடம் கொடுக்கவில்லை.

டாடா குழுமம் பிஸ்லெரி நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என நம்புகிறேன். பிஸ்லெரியை விற்பது தொடர்பாக இரண்டு வருடமாக பேச்சுவார்த்தை நடத்தி, அதன் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

-இவ்வாறு செளஹான் தெரிவித்துள்ளார்.  பிஸ்லெரி நிறுவனத்தை வாங்க ரிலையன்ஸ், நெஸ்லே உள்ளிட்ட பல நிறுவனங்கள் விரும்பம் தெரிவித்த நிலையிலும் டாடாவை தேர்ந்தெடுத்தாக அவர் கூறியுள்ளார்.

பிஸ்லேரி இத்தாலிய பிராண்டாக இருந்த போது, 1965ம் ஆண்டு முதல் மும்பையில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1969ம் ஆண்டு சௌஹான் அதை வாங்கினார். தற்போது இந்த நிறுவனம் தண்ணீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட 122 ஆலைகளை இயக்கு வருகிறது. இதில் 13 ஆலைகள் பிஸ்லெரிக்கு சொந்தமானவை. இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் என மொத்தமாக 4,500 விநியோகஸ்தர்களை கொண்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com