ஆப்பிள்
ஆப்பிள்

ஆப்பிளால் தோல்வியுற்ற பாஜக: இமாச்சலில் காங்கிரஸ் களிப்பு!

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக ஆப்பிள்  பழம் உள்ளதாக சொல்லப் படுகிறது.

இமாச்சல பிரதேசத்தை பொறுத்தமட்டில் ஆப்பிள் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில் பிரதானமாக இருந்து வருகிறது. மாநிலத்துக்கு கிடைக்கும் மொத்த வருவாயில் ரூ.5 ஆயிரம் கோடி அல்லது 13.5 சதவீதம் ஆப்பிள் பழம் மூலமாக கிடைத்து வருகிறது.

மொத்தமுள்ள 68 சட்டசபை தொகுதிகளில் 20 தொகுதிகளில் பிரதான தொழிலாக ஆப்பிள் விவசாயம் உள்ளது. அதன்படி சிம்லா மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில், மாண்டி, குல்லு மற்றும் சம்பா மாவட்டத்தில் உள்ள தலா 4 தொகுதிகள், கின்னாபூர், லாஹால் மற்றும் ஸ்பிட்டி மாவட்டங்களில் தலா ஒரு தொகுதிகளில் ஆப்பிள் விவசாயம் முக்கியமானதாக உள்ளது.

மேலும் பல தொகுதிகளில் ஆப்பிள் விற்பனையாளர்கள் அதிகமாக உள்ளனர். இதனால் இமாச்சல பிரதேச தேர்தலில் ஆப்பிள் விவசாயிகள் வெற்றியை தீர்மானிப்பவர்களாக உள்ளனர்.

இந்நிலையில் ஆப்பிள்களுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எம்ஐஎஸ்ஸில் வழங்கிய ஆப்பிளுக்கான நிலுவை தொகை வழங்கப்படாதது பெரிய பிரச்சனையாக வெடித்தது. இதையடுத்து ஆப்பிள் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை காங்கிரஸ் கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால், ஆப்பிளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு நீக்கப்படும் என்றும், ஒவ்வொரு வகை ஆப்பிளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தது.

இதன் அடிப்படியில்தான் அம்மாநிலத்தின் பெருவாரியான ஆப்பிள் விவசாயிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com