வேளாங்கண்ணியிலிருந்து நியூசிலாந்துக்கு படகு பயணம் – சிக்கிய இலங்கை அகதிகள்; அதிரடி காட்டிய கியூ பிராஞ்ச் அதிகாரிகள்

வேளாங்கண்ணியிலிருந்து நியூசிலாந்துக்கு படகு பயணம் – சிக்கிய இலங்கை அகதிகள்; அதிரடி காட்டிய கியூ பிராஞ்ச் அதிகாரிகள்

டகு மூலம் நியூசிலாந்து தப்பிச் செல்ல முயன்ற ஆறு இலங்கை அகதிகள் கியூ பிராஞ்ச் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்கள். நாகை மாவட்டம் வேளாங் கண்ணியில் நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

படகு வழியாக இலங்கையிலிருந்து வேதாரண்யம் வருவதும் தேவையானவற்றை வாங்கிக்கொண்டு அடுத்த படகில் யாழ்ப்பாணத்திற்க திரும்பிச் செல்வதும் 40 ஆண்டுகளுக்கு முன்னர் தினமும் பார்க்கக்கூடிய காட்சியாக இருந்தது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர்கள் பலர், சினிமா பார்ப்பதற்காக வேதாரண்யம், ராமேஸ்வரத்திற்கு வந்து சென்ற கதைகளெல்லாம் நிறைய உண்டு.

ராஜீவ் படுகொலைக்குப் பின்னர் கடலோர காவல் படைகளின் ரோந்து அதிகமானது. இலங்கைத் தமிழர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டார்கள். மீறி இந்தியக் கடல் எல்லைக்கு வருபவர்களை ராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமிற்க அனுப்பி வைத்ததார்கள். கடந்த 30 ஆண்டுகளில் படிப்படியாக கிழக்குக் கடற் கரையோரம் நடமாட்டம் குறைந்தது, அமைதியும் திரும்பியது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கை அகதிகள், படகு மூலம் சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்ல முயற்சி செய்த சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற பகுதிகளில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஆறு பேர் தப்பித்து செல்ல முடிவு செய்திருக்கிறார்கள்.

பூம்புகார் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து படகை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். தன்னை ஒரு மீனவராக அறிமுகப்படுத்திக்கொண்ட துஷ்யந்தன் என்னும் இலங்கை அகதி, 36 லட்சத்திற்கு ஒரு படகை விலைக்கு வாங்கியிருக்கிறார். அதன் முன்பணமாக 11 லட்சத்தையும் தந்திருக்கிறார். மீதி பணத்தை தந்துவிட்டு படகை எடுத்துக்கொள்வதாக ஊருக்கு சென்றிருக்கிறார்.

சம்பந்தப்பட்ட ஆறு இலங்கை அகதிகளும் வேளாங்கண்ணிக்கு வந்து, அங்கே ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் தகவல் கிடைத்த கியூ பிராஞ்ச் சி.ஐ.டி அதிகாரிகள் தேடுதல் வேட்டையை நடத்தியிருக்கிறார்கள். தேடுதல் வேட்டையில் நான்கு பேரும் சிக்கியிருக்கிறார்கள்.

அவர்களிடமிருந்து 17 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது. ஆறு பேர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. தப்பிச் செல்ல முயற்சி செய்தவர்களில் ஆறு பேர் மட்டுமல்ல இன்னும் சிலரும் இருக்கக்கூடும் என்று விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

கிழக்குக் கடற்கரையில் உள்ள பகுதிகளில் ஒரு காலத்தில் கடத்தல் தேசமாக இருந்திருக்கின்றன. ஏகப்பட்ட உயிர்களை பலிகொடுத்த பின்னரே அமைதி தேசமாக மாறியது. கடலோரப் பகுதிகளில் இலங்கை அகதிகள் மீண்டும் நடமாடுவது டெல்டா மக்களை பீதியில் ஆழ்த்தியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com