பாடி டிஸ்மார்பிக் டிஸ் ஆர்டர்… இந்த நோய் உங்களுக்கு இருக்கா? டெஸ்ட் பண்ணி பார்த்துடலாம் வாங்க!

பாடி டிஸ்மார்பிக் டிஸ் ஆர்டர்… இந்த நோய் உங்களுக்கு இருக்கா? டெஸ்ட் பண்ணி பார்த்துடலாம் வாங்க!

டல் டிஸ்மார்ஃபிக் குறைபாடு என்பது ஒரு மனநலக் கோளாறு, இந்தக் குறைபாட்டின் தாக்கம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் சதா உங்கள் தோற்றத்தைப் பற்றி குறைபட்டுக் கொண்டே இருப்பீர்கள். இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சனையா? எல்லோருக்குமே ஏதாவது ஒரு நேரத்தில் இப்படித்தானே தோன்றக்கூடும்! என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி இல்லை. இது முதலில் சிறு பிரச்சனையாகத் தோன்றலாம். உள்ளுக்குள் நம்மால் உணரப்பட்டால் மட்டுமே வெளிப்படக்கூடிய இந்த குறைபாடு வெளிப்படையாக மற்றவர்களால் எளிதில் காண முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால், இது ஏற்படுத்தும் உணர்வுகள் உங்களை நிலைகுலையச் செய்வதாக இருக்கும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

இது மற்றவர்களால் பார்க்க முடியாத குறைபாடாகத் தோன்றினாலும், இந்தக் குறைபாடு இருந்தால் நீங்கள் மிகவும் சங்கடமாகவும், வெட்கமாகவும், கவலையாகவும் உணர்வீர்கள். அதனால் பல சமூக சூழ்நிலைகளைத் தவிர்க்கத் தொடங்குவீர்கள். இது ஒரு கட்டத்தில் இண்ட்ரோவெர்ட் என்று சொல்கிறார்களே அதாவது மரவட்டையாக உள்ளுக்குள்ளே சுருங்கிக் கொண்டு வெளி உலகத்தை அந்நியமாக அணுகும் மனோபாவம் அந்த நிலைக்கு கூட இந்த குறைபாடு உங்களை இட்டுச் செல்லலாம்.

இந்தக் குறைபாடு இருப்பவர்களுக்கு அடிக்கடி தங்களது தோற்றம் குறித்த தன்னம்பிக்கை குறைவு ஏற்படும். அதனால் மீண்டும் மீண்டும் கண்ணாடி பார்த்துக் கொண்டு, தங்களை சீர்படுத்திக் கொண்டே இருப்பார்கள். நாளில் பலமணி நேரம் இப்படிக் கழிந்தாலும் லேசில் திருப்தி ஏற்படாது. அப்படியே அபூர்வமாக திருப்தி ஏற்பட்டாலும் கூட அதற்கு ஆயுள் வெகு குறைவு. தொடர்ந்து இந்த மனநிலை நீடித்தால் பிறகு மன உளைச்சல் ஏற்படும். இந்த மன உளைச்சலானது உங்களது பிற வேலைகளில் தன்னுடைய கைவரிசையைக் காட்டத் தொடங்கும். அது வீட்டு வேலையோ, அல்லது அலுவலக வேலையோ எதுவாக இருந்தாலும் சரி அதில் உங்களது செயல்திறன் வெகுவாகக் குறையத் தொடங்கும். இதனால் சதா பதட்டத்துடனே இருக்க நேரிடும். இதற்கான தீர்வு தான் என்ன என்கிறீர்களா?

டிஸ்மார்பிக் கோளாறுக்கான அறிகுறிகள்…

*மற்றவர்களுக்குப் பார்க்க முடியாத அல்லது சிறியதாகத் தோன்றும் தோற்றக் குறைபாடுகளில் மிகவும் ஆர்வமாக இருப்பது.

*உங்கள் தோற்றத்தில் ஒரு குறைபாடு உள்ளது, அது உங்களை அசிங்கமாக அல்லது சிதைக்க வைக்கிறது என்ற வலுவான நம்பிக்கை.

*மற்றவர்கள் உங்கள் தோற்றத்தை எதிர்மறையாக கவனிக்கிறார்கள் அல்லது உங்களை கேலி செய்கிறார்கள் என்று நம்புவது.

*கண்ணாடியை அடிக்கடி சரிபார்த்தல், உடைகளைச் சீர்ப்படுத்துதல் அல்லது முகச்சருமத்தை சரி செய்வது போன்ற கட்டுப்படுத்த கடினமாக இருக்கும் நடத்தைகளில் ஈடுபடுதல்.

*ஸ்டைலிங், ஒப்பனை அல்லது உடைகள் மூலம் உணரப்பட்ட குறைபாடுகளை மறைக்க முயற்சிப்பது.

*உங்கள் தோற்றத்தை மற்றவர்களுடன் தொடர்ந்து ஒப்பிட்டுப் பார்ப்பது.

*மற்றவர்களிடமிருந்து உங்கள் தோற்றத்தைப் பற்றி அடிக்கடி உறுதியளிக்கும் விதமான ஆறுதல் வார்த்தைகளை எதிர்பார்ப்பது.

*பிறருடன் அடிக்கடி கலந்து பழகும் சூழலை எதிர்கொள்ளத் தடுமாறுவது, தவிர்ப்பது.

*உங்கள் உடலின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் நீங்கள் அதிக கவனம் செலுத்தலாம். அதுவும் டிஸ்மார்பிக் குறைபாடுக்கான அறிகுறிதான்.

*முகம், மூக்கு, நிறம், முகச்சுருக்கங்கள், முகப்பரு மற்றும் பிற கறைகள்.

*தோற்றம், மெலிதல் மற்றும் வழுக்கை தலை.

*தோல் மற்றும் நரம்பு தோற்றம்.

*மார்பக அளவு.

*தசை அளவு மற்றும் தொனி.

*பிறப்புறுப்பு போன்ற உடல் பாகங்களைப் பற்றிய கவலைகள் சதா உங்களை அரித்துத் தின்றால் நீங்கள் அதை டிஸ்மார்பிக் குறைப்பாடாகத்தான் கருத வேண்டும்.

சரி, எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்கிறீர்களா?!

உங்கள் தோற்றம் குறித்த அவமானமும் சங்கடமும் உடனடியாக டிஸ்மார்ஃபிக் கோளாறுக்கு சிகிச்சை பெறுவதலிருந்து உங்களைத் தடுக்கலாம். ஆனால் உங்களுக்கு மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் சில இருந்தால் உடனடியாக நல்ல மனநல நிபுணரைப் பார்க்கவும். ஏனெனில், உடல் டிஸ்மார்பிக் கோளாறுகள் பொதுவாக தானாகவே சரியாகிவிடாது. சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது காலப்போக்கில் மோசமாகி, கவலை, விரிவான மருத்துவக் கட்டணங்கள், கடுமையான மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணங்கள் மற்றும் துர் நடத்தைக்கு வழிவகுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com