பாலிவுட்டின் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் மாரடைப்பால் மறைவு!

பாலிவுட்டின் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் மாரடைப்பால் மறைவு!

பாலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகரும், இயக்குநரருமான சதீஷ் சந்திர கௌஷிக் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த துயர செய்தி பாலிவுட் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏப்ரல் 13, 1956 - ல் அரியானாவில் பிறந்த சதீஷ் சந்திர கவுசிக், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் 1987-ம் ஆண்டு வெளியான திரைப்படமான மிஸ்டர் இந்தியா மூலம் நடிகராக அறிமுகமானவர்.

இதுவரை சுமார் 90 படங்களில் நடித்துள்ள சதீஷ் கௌஷிக், 13 படங்களை இயக்கியுள்ளார். தற்போது 66 வயதான அவர் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாக தகவல்கள் வெளியானது.

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ள சதீஷ் கௌஷிக், பிரபல இயக்குநராகவும் திரையுலகில் வலம் வந்துள்ளார்.

ஸ்ரீதேவி மற்றும் அனில் கபூர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற மிஸ்டர் இந்தியா படத்தில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் சதீஷ் கௌஷிக்.

தமிழில் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான சேது படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கியவர் சதீஷ் கௌஷிக் ஆகும். இந்தியில் ’தேரே நாம்’ எனும் பெயரில் ரீமேக் செய்தார். சல்மான் கான், பூமிகா நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.

இவரது இழப்பால் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ள பாலிவுட் பிரபலங்கள் தொடர்ந்து தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com