கொளுத்தும் வெய்யில் - அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கவேயில்லையே.. அதுக்குள்ளேயா? புலம்ப வைக்கும் ஹாட் சம்மர்!

கொளுத்தும் வெய்யில் - அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கவேயில்லையே.. அதுக்குள்ளேயா? புலம்ப வைக்கும் ஹாட் சம்மர்!

தமிழ்நாடு மட்டுமல்ல தேசிய அளவில் கோடை வெய்யில் உச்சத்தில் இருக்கிறது. பிப்ரவரி முதல்வாரத்தில் ஆரம்பித்த வெப்பநிலை கடந்த இரண்டு மாதங்களாகவே ஏறிக்கொண்டே வந்திருக்கிறது. அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில் உச்சந்தலையில் இறங்கும் வெயில் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியிருக்கிறது.

சமீபத்தில் மகராஷ்டிராவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்து அதன் காரணமாக 13 பேர் பலியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாகவே வெய்யில் 100 டிகிரியை தாண்டியிருக்கிறது. வெயிலின் கடுமை இன்னும் உயரக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை வானிலையில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை. இது போன்ற கடும் வெயிலை தமிழகம் ஏற்கனவே சந்தித்திருக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் செய்தாலே, கோடையை வென்றுவிடலாம்.

அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக நாடு முழுவதும் 9 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அடுத்து வரும் சில நாட்களில் மேற்கு வங்கம், ஆந்திரா, பீகார் ஆகிய 3 மாநிலங்களில் வெப்ப அலை கடுமையாகும் என்றும் தெரிவித்திருக்கிறது. இதற்காக ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இன்னும் சில மாநிலங்களில் கண்காணிப்பில் இருந்து வருகின்றன.

வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசுகள் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பொதுமக்கள் கூடும் இடங்களில் போக்குவரத்து மாற்றியமைக்கப்படுகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியில் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட மூன்று மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கிம், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வெப்ப அலைகள் கடுமையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வெப்ப அலைகளினால் குழந்தைகள், முதியோர்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திரிபுராவில் பள்ளி நேரம் அதிகாலைக்கு

மாற்றப்பட்டு உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை நேற்று 13 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியிருக்கிறது. சில இடங்களில் அனல்காற்று வீசியதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இன்னும் 45 நாட்களை கடந்தாக வேண்டும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com