பெங்களூரில் கொட்டிய பண மழை…

பெங்களூரில் கொட்டிய பண மழை…

பெங்களூரில் திடீரென பணத்தை பறக்க விட்ட இளைஞர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் கிடந்த பணத்தை பொதுமக்கள் அள்ளிச்சென்றுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், பெங்களூர் கே.ஆர். புரம் மேம்பாலத்தில் இருந்து கோட்டுடன் காட்சி அளிக்கும் நபர் ஒருவர் கையில் பையை மாட்டிக்கொண்டு அதிலிருந்து பணத்தை எடுத்து மேம்பாலத்தின் இரண்டு பக்கங்களில் இருந்தும் பணத்தை எடுத்து வீசுகிறார்.  அருகில் இருந்த சிலர் நேரில் கேட்க, கொடுக்க மறுத்து பணத்தை மேலிருந்து அள்ளி வீசுகிறார். மேம்பாலத்தில் இருந்து கீழே விழும் பணத்தைப் பிடிக்க மக்கள் திரண்டனர்.

பரபரப்பான மார்க்கெட் பகுதியான அங்கு, அவ்வழியில் சென்ற மக்கள் மீது பணத்தை வீசியதால் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது டவுன்ஹாலுக்கு அருகில் உள்ள கே.ஆர். மார்க்கெட்டில், மேம்பாலத்திற்கு கீழே கணிசமான மக்கள் கூட்டம் கூடியிருந்தது.

சம்பந்தப்பட்ட நபர் வினோதமாக, கழுத்தில் சுவர்க் கடிகாரத்தையும் கழுத்தில் அணிந்திருந்தார். மேம்பாலத்தில் இருந்து பணத்தை அவர் தூக்கி எறியத் தொடங்கியவுடன் மக்கள் அவரைச் சுற்றி வளைத்தனர். ரூபாய் 10 மதிப்புடைய கரன்சி நோட்டுகள் இருந்ததாக எடுத்துச்சென்ற மக்கள் கூறினர்.

அந்த நபர் யார், எதற்காக பணத்தை அள்ளி வீசினார் என்பது தெரியவில்லை. போலீசார் அங்கு வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து கிளம்பிச் சென்றதாகக் கூறப் படுகிறது. இதுகுறித்து உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரைத் தேடி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com