சிபிஎஸ்இ  ப்ளஸ் –டூ மாணவர்களே.. இதை நம்பாதீங்க!

சிபிஎஸ்இ  ப்ளஸ் –டூ மாணவர்களே.. இதை நம்பாதீங்க!

நாட்டில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படுவதற்கான தேதி அட்டவணைப் பட்டியல் சமூக வலைதளங்களில் பரவி வருவது போலியானது என்று மாணவர்கள் அதைநம்ப வேண்டாம் என்றும் சிபிஎஸ்இ தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த 2 வருடங்களாக கொரோனா லாக்டவுன் காரணமாக சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இரண்டு கட்டங்களாக செமஸ்டர் முறையில் நடைபெற்றது. மேலும் தேர்வுக்கான பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன. இந்நிலையில், இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கிய நிலையில், வழக்கம்போல தேர்வுகள் நடத்தப்படும் என சிபிஎஸி தேர்வு வாரியம் தெரிவித்தது.

மேலும் இந்த கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட  உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் தேர்வு கால அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் சிபிஎஸ்இ 12 -ம் வகுப்பு தேர்வு தேதி தாள் இணையதளத்தில் தற்போது பரவி வருகின்றது.

இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்ததாவது;

நாட்டில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவணை அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப் படவில்லை. இதுபோன்ற அட்டவணை சமூக வலைத்தளத்தில் பரவி வருவது முற்றிலும் போலியானது.

இதனை மாணவர்கள் நம்ப வேண்டாம். அதிகாரபூர்வமான தேர்வு அட்டவணை தேதி பட்டியல் விரைவில் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com