திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களால் மம்தா பானர்ஜி நிராகரிக்கப்படுவார் : ஒன்றிய அமைச்சர் பேச்சு!

திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களால் மம்தா பானர்ஜி நிராகரிக்கப்படுவார் : ஒன்றிய அமைச்சர் பேச்சு!

டந்த வாரம் நடைபெற்ற மேற்குவங்க ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட கலவரத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய கப்பல் போக்குவரத்து இணையமைச்சர் சாத்தனு தாக்குர் பங்கேற்று பேசினார்.

இப்போது திரிணாமுல் காங்கிரஸ் அரசு நீண்ட காலமாக ஆட்சி செய்து மேற்குவங்கத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து உள்ளது. தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் கூட தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் நடைபெறவில்லை, மாறாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினுடைய மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற தேர்தலாகும்.

இந்தத் தேர்தல் நியாயமாக நடைபெற்று இருக்குமானால் பாரதிய ஜனதா கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறது. பல்வேறு உயிர்கள் கொல்லப்பட்டு இருக்கிறது. பல வாக்குச்சாவடிகளில் போலி வாக்குப்பதிவு நடைபெற்ற வீடியோக்கள் எல்லாம் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஒன்றிய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

5 மாதத்திற்கு மேல் மம்தா பானர்ஜி அரசு நிலைக்காது. எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம், திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களால் மம்தா பானர்ஜி நிராகரிக்கப்படுவார் என்று பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் சாத்தனு தாக்குர் தெரிவித்தார்.

இதற்கு, பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற முடியாத விரக்தியில் இருக்கிறது. மேலும் அவர்களுடைய பார்முலா மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதுதான், அதற்கு முயற்சி எடுக்கிறார்கள். அது மேற்கு வங்கத்தில் முடியாது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பதில் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com