சண்டிகர் கல்லூரி மாணவிகள் வீடியோ வெளியான விவகாரம்...

சண்டிகர் கல்லூரி மாணவிகள் வீடியோ வெளியான விவகாரம்...

பஞ்சாபின் மாநிலத்தில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நேற்று நள்ளிரவு திடீரென மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மாணவிகள் சிலர் குளிக்கும் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானதாக போராட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

இங்குள்ள பல்கலைக்கழக விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் ஒருமாணவி மாணவிகள் குளிக்கும் போது வீடியோ எடுத்து தனது ஆண் நண்பருக்கு அனுப்பியதாகவும் அவர் அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக விடுதி வார்டன் விசாரணை நடத்தி, சக மாணவிகளை வீடியோ எடுத்த எம்.பி.ஏ. மாணவியை விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டார்.

இந்த தகவல் தீயாய் பரவியதை அடுத்து  சண்டிகர் பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை நள்ளிரவில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் உயரதிகாரிகள் விரைந்து வந்து மாணவ, மாணவிகளை சமாதானப்படுத்தினர்.

ஐபிசி 354 பிரிவின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்து காவல்துறை அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் எந்த தவறான முடிவுகளுக்கு போகாமல் இருக்க அவர்களுக்கு கவுன்சிலிங் தரப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு மேற்கொண்டு விசாரித்து வருவதாக சம்பந்தபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com