சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 3வது முறையாக இன்று மாற்றப்பட உள்ளது!

சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 3வது முறையாக இன்று மாற்றப்பட உள்ளது!

சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 2 ஆவது முறையாக வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து, சந்திரயான்-3 விண்கலம் கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக ஏவப்பட்டது.

சுமார் 4 ஆயிரம் கிலோ எடைக் கொண்ட சந்திரயான்-3 விண்கலத்தின் புவி வட்டப்பாதை கடந்த சனிக்கிழமை முதன் முறையாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இன்று, சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையை 2வது முறையாக உயர்த்தும் முயற்சி வெற்றி பெற்றதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

அதன்படி, சந்திரயான்-3 விண்கலம் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 226 கிலோமீட்டர் தூரத்திலும் அதிகபட்சமாக 41 ஆயிரத்து 603 கிலோ மீட்டர் தூரத்திலும் சுற்றி வருகிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரையிலான நேரத்தில், விண்கலம் அடுத்த புவி சுற்று வட்டப்பாதைக்கு மாற்றப்படும் என இஸ்ரோ கூறியுள்ளது.

ஏற்கனவே சந்திரயான்-2 என்ற விண்கலத்தை கடந்த 2019 ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்பு சந்திரயான்-2 2019 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது. இருந்த போதிலும், தொழில்நுட்பக் கோளாறால் திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. இந்த நிலையில் பலரும் சந்திரயான் 3 வெற்றியை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com