சென்னை - திருச்சி - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்வே திட்டம்! பிரதமரின் கதி சக்தி திட்டம் மூலம் செயல்படுத்தப் பரிந்துரை !

சென்னை - திருச்சி - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்வே திட்டம்! பிரதமரின் கதி சக்தி திட்டம் மூலம் செயல்படுத்தப் பரிந்துரை !

இந்தியா முழுவதும் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பது தற்போதைய மத்திய அரசின் முக்கியக் குறிக்கோள் எனலாம் . பிரதமரின் கதி சக்தி திட்டம் மூலம் உள்கட்டமைப்புத் திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டிய அனைத்து துறைகளையும் இணைத்து வேகமாகச் செயல்படுத்தக் கூடிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளது மத்திய அரசு.

அதன் முதல் கட்டமாக நாட்டின் முக்கியமான வர்த்தகப் பகுதிகள் அனைத்திலும் உற்பத்தி, போக்குவரத்து, ஏற்றுமதிக்கு ஏதுவாகக் கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளைத் தீவிரமாகச் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை - திருச்சி - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணிகளை விரைவில் துவங்க உள்ளது.

சென்னையில் இருந்து திருச்சி வழியாகத் தூத்துக்குடி வரையிலான எக்ஸ்பிரஸ்வே திட்டத்திற்குப் பிஎம் கதி சக்தி கீழ் சுமார் 30,502 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசு அனுமதி அளிக்கப்பட்ட 4.53 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 63 இன்பரா திட்டங்களில் 3வது அதிக மதிப்புடைய திட்டம் தான் சென்னை - திருச்சி - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் தான்.

பிஎம் கதி சக்தி நேஷ்னல் மாஸ்டர் பிளான் கீழ் Network Planning Group (NPG) சுமார் 63 திட்டங்களுக்குப் பரிந்துரை செய்துள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம் இணைப்பு, உற்பத்தி, லாஜிஸ்டிக்ஸ் ஆகியவை பெரிய அளவில் மேம்படுத்தப் படும். இந்த 63 திட்டங்களுக்குச் சுமார் 4.53 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி உட்செலுத்துல் தேவைப்படுகிறது.

மத்திய அரசு 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மூலதன திட்டத்தை அறிவித்த நிலையில் NPG இந்த 4.53 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தைப் பரிந்துரை செய்துள்ளது.

NPG பட்டியலிட்டு உள்ள இந்த 63 திட்டத்தில் எக்ஸ்பிரஸ்வே, சாலை நெட்வொர்க், ரேபிட் ரெயில், மெட்ரோ ரயில், ரயில்வே திட்டம், பெட்ரோலியம் பைப்லைன் எனப் பல உள்கட்டமைப்புத் திட்டங்கள் உள்ளது. மேலும் 6 மத்திய அமைச்சகத்தைச் சார்ந்து திட்டங்களைப் பரிந்துரை செய்யப்பட்ட உள்ளது.

இந்த 63 திட்டத்தில் சுமார் 23 திட்டங்கள் மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறையைச் சார்ந்து உள்ளது, இத்துறை திட்டங்களின் மொத்த மதிப்பீடு 2,99,476 கோடி ரூபாய். இதில் அதிக மதிப்புடைய திட்டங்களில் டாப் 3 இடத்தைப் பிடிப்பது புனே - பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே 49,241 கோடி ரூபாய், டெல்லி - குருகிராம் RRTS 37,987 கோடி ரூபாய், சென்னை - திருச்சி - தூத்துக்குடி 30,502 கோடி ரூபாய் திட்டம் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com