இனி பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவுடன் சிக்கன்...!

இனி பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவுடன் சிக்கன்...!

மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு மத்திய உணவு திட்டத்தில் கூடுதலாக கோழிக்கறி மற்றும் பழங்களை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம் ஜனவரி முதல் ஏப்ரல் வரை வாரம் தோறும் சிக்கன் மற்றும் பழங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என மம்தா பானர்ஜி அரசு கூறியுள்ளது.

இந்தியா முழுவதும் அந்தந்த மாநில அரசுகள் அங்குள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மத்திய உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. மாநிலத்திற்கு ஏற்ப அதில் மாற்றங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் ஆளும் அரசு கடந்தாண்டு மத்திய உணவு திட்டத்துடன் சேர்த்து காலை உணவு திட்டத்தையும் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில அரசு அங்கு மத்திய உணவு திட்டத்தில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, தற்போது வழங்கப்படும் உணவுகளுடன் கூடுதலாக கோழிக்கறி மற்றும் பழங்களை மதிய உணவில் வழங்கப் போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அங்கு மத்திய உணவு திட்டத்தின் கீழ் சுமார் 1.16 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனாளிகளாக உள்ளனர். தற்போது சாதம், பருப்பு, காய்கறி, சோயாபீனஸ், முட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன.

வளரும் குழந்தைகளின் ஊட்டச்சத்தை கருத்தில் கொண்டு சிக்கன் சேர்க்கப் பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் ஜனவரி முதல் ஏப்ரல் வரை வாரம் தோறும் சிக்கன் மற்றும் பழங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும், இதற்காக கூடுதலாக ரூ.371 கோடி ஒதுக்கப்படும் என உத்தரவில் தெரிவித்துள்ளது. ஏப்ரலுக்குப் பின் இந்த திட்டம் தொடருமான என்ற தகவல் வெளியாகவில்லை.

அதே போல் தமிழ்நாட்டில் ஆளும் அரசும் இது போன்ற திட்டத்தை கொண்டு வருமா? என தமிழக மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் ஆர்வமாக எதிர்ப் பார்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com