கணக்கு டீச்சர் வேலைக்கு குஜராத் பள்ளி வெளியிட்ட புத்திசாலித்தனமான விளம்பரம்!

கணக்கு டீச்சர் வேலைக்கு குஜராத் பள்ளி வெளியிட்ட புத்திசாலித்தனமான விளம்பரம்!

வேலைக்கு ஆள் தேடும் நிறுவனங்கள் விளம்பரங்கள் வெளியிடும்போது அவ்வப்போது ஏதாவது ஒரு புதுமையான முறையை பின்பற்றுவது வழக்கம்.

ஆனால், குஜராத்தில் உள்ள ஒரு பள்ளி கணக்கு வாத்தியார் வேலைக்கு நூதனமான முறையில் விளம்பரப்படுத்தியிருந்தது.

அது என்ன என்கிறீர்களா? மேலே படியுங்கள்.

மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களைத் தேர்வு செய்வது என்பது சாதாரண காரியமல்ல. மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்கு ஒரு நல்ல ஆசிரியர் வேண்டும். அதுவும் கணக்குப் பாடத்துக்கு ஆசிரியர் வேண்டும் என்றால் அவர் அதிபுத்திசாலியாக இருக்க வேண்டும். ஏனெனில் மாணவர்களின் சந்தேகங்களுக்கு எல்லாம் பதில் சொல்லியாக வேண்டுமே.

குஜராத்தில் உள்ள பக்தாஸ்ரம் என்னும் பள்ளி கணக்கு வாத்தியார் வேலைக்கு புத்திசாலித்தனமாக விளம்பரம் செய்திருந்தது. மிகவும் நூதனமான முறையில் வெளியிடப்பட்ட இந்த விளம்பரத்தை தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா தனது டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்த பள்ளி, தங்கள் பள்ளிக்கு கணக்கு வாத்தியார் வேண்டும் என்று விளம்பரப்படுத்தி பள்ளியின் முகவரியை வெளியிட்டிருந்தது. அத்துடன் ஒரு கணக்குப் புதிரையும் கொடுத்து இதற்கு விடை கண்டுபிடிப்பவர்கள்தான் விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தது. அதாவது தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண்ணுக்கு பதிலாக அதை கண்டுபிடிக்க ஒரு புதிர் போட்டிருந்தது.

இந்த புதுமையான விளம்பரத்தை டுவிட்டரில் 11 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இந்த விளம்பரம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சரியான ஆசிரியரைத் தேர்ந்தெடுக்க அவர்களுக்கே பரீட்சை வைத்த பள்ளியை நெட்டிஸன்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

ஆனால், ஒரு மாணவர், இந்த விடுகதைக்கு விடை கண்டுபிடிக்கும் மாணவர்களுக்கு எதுக்கு கணக்கு டீச்சர்? என்று கிண்டலாக கேட்டுள்ளார்.

ஆமாம் இந்த விளம்பரம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com