வணிக சிலிண்டர் விலை குறைப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி!

வணிக சிலிண்டர்
வணிக சிலிண்டர்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. இந்த விலை நிர்ணயம் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப் பட்டு வருகின்றன.

 அந்த வகையில் சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ரூ.116 குறைந்து ரூ.1,893-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.1,068-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 இந்த விலை குறைப்பு இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அக்டோபர் மாதத்தில் ரூ.2,009-க்கு விற்பனை செய்யப்பட்ட வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தற்போது குறைந்திருப்பது சிறு வியாபாரிகள், உணவக உரிமையாளர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com