மாற்றுத்திறனாளி
மாற்றுத்திறனாளி

ரயில் பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை!

ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

இனி ரயில்களில் புதிதாக இணைக்கப்பட்டு வரும் மூன்றாம் வகுப்பு எகானமி ஏசி பெட்டிகளிலும், மாற்று திறனாளிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவினை ரயில்வே நிர்வாகம் அறிவித்ததையடுத்து மாற்று திறனாளிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.

ரயில்களில் குறைந்த கட்டணத்தில் 'ஏசி' பெட்டியில் பயணிக்கும் வகையில், மூன்றாம் வகுப்பு ஏசி எகானமி என்ற புதிய வகை பெட்டிகள், முக்கிய விரைவு ரயில்களில் இணைக்கப்பட்டு வருகின்றன.

ரயில் பெட்டி
ரயில் பெட்டி

இந்நிலையில், மூன்றாம் வகுப்பு எகானமி ஏசி பெட்டிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, ரயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது.

'மாற்றுத் திறனாளிகளுக்கு, விரைவு, மெயில் ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில், தலா நான்கு படுக்கை வசதியும்; மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில், தலா இரண்டு படுக்கை வசதிகளும் ஒதுக்கப்படுகின்றன. 'அதேபோல் மூன்றாம் வகுப்பு எகானமி ஏசி பெட்டிகளிலும், தலா இரண்டு படுக்கை வசதிகள் ஒதுக்க வேண்டும்' என, ரயில்வே வாரியம் கூறியுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com