இந்திய வரைபடத்தை மிதித்ததாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாருக்கு எதிராக கண்டனங்கள்

இந்திய வரைபடத்தை மிதித்ததாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாருக்கு எதிராக கண்டனங்கள்

அக்‌ஷய்குமார் பாலிவுட்டில் 1991ல் சௌகான்ந்  திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பாலிவுட்டில் பிரபலமான முன்னணி நடிகராக திகழ்பவர். இவர் நடித்த ஒருசில படங்கள் தவிர மற்ற படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள்தான்.

அக்‌ஷய்குமார் விளம்பர படம் ஒன்றில் நடித்தார். அப்படதில் ஒரு காட்சியில் நடிக்கும்போது இந்திய வரைபடத்தை மிதித்ததாக அக்‌ஷய்குமாருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. நாளுக்கு நாள் இது வலுத்து வருகின்றன.  ஆனால் இது குறித்து எந்த விளக்கமும் அவர் இதுவரைக்கு அளிக்கவில்லை.

 இம்ரான் காஷ்மியுடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்திருக்கும் ‘செல்பி‘ திரைப்படம் இம்மாதம் 24ஆம் தேதி திரைக்கு வருகிறது.   அதன் பின்னர் ஓய்வு எடுப்பதற்காக அக்‌ஷய்குமார் வடக்கு அமெரிக்காவில் மார்ச் மாதம் சுற்றுலா செல்கிறார். அதற்காக விளம்பர வீடியோ ஒன்றை எடுத்தார். அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

19 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் அக்‌ஷய்குமார் உடன் திசா பதாணி,  நோரா பிரதேகி,  மௌனி ராய்,  சோணம் பசுவா உள்ளிட்டவரும் உள்ளனர்.  வீடியோவில் நடிகர்கள் அனைவரும் பூமிப்பந்தில் நடப்பது போன்று காட்சி உள்ளது.  பூமிப்பந்து சுழல நடிகர்கள் நடக்கிறார்கள்.   மற்ற நடிகர்கள் பிற நாடுகளின் வரைபடங்கள் மீது காலடி எடுத்து வைக்கும் நிலையில் , அக்‌ஷய்குமார் இந்திய வரைபடத்தில் நடக்கிறார் .  இந்த வீடியோ வெளியான நிலையில் சமூக வலைத்தளங்களில் அக்‌ஷய்குமாருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன . இந்திய வரைபடத்தை  மிதித்து அவமதித்துவிட்டார் என்று குற்றம் சாட்டி வருகின்றனர் .

அக்‌ஷய்குமாரின் கனடா குடி உரிமையை வைத்து ட்ரோல்கள் செய்து வருகின்றார்கள். உலகின் மற்ற நாடுகளின் வரைபடத்தில் மற்ற பிரபலங்கள் காலடி எடுத்து வைக்கும் போது அக்‌ஷய்குமார் இந்திய வரைபடத்தில் அடி எடுத்து வைக்கிறார்.  அவர் இந்திய வரைபடத்தில் நடப்பதால் அது அவமதிப்பு செயல்தான் என்று கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

ஆனால், அக்‌ஷய்குமார் இந்த விஷயம் குறித்து இதுவரைக்கும் எந்த விளக்கமும் சொல்லவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com