காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை! சூரத் நீதிமன்றம் தீர்ப்பு!

தீர்ப்பு
தீர்ப்பு

2019 பொதுத்தேர்தல் பரப்புரையின் போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என பேசி இருந்தார். இது தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கில் இன்று குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில், மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல்காந்தி பேசினார். கோலார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்ப பெயரை வைத்திருக்கிறார்கள் என கூறியிருந்தார். அப்போதே , ”அனைத்து திருடர்களும் ஏன் ‘மோடி’ என்ற ஒரே குடும்பப் பெயரை வைத்துள்ளனர்?” என்று பேசியதாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 17-ந் தேதி சூரத் குற்றவியல் நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குற்றவியல் நீதித்துறை தலைமை நீதிபதி எச்.எச்.வர்மா இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

குஜராத் சூரத் நீதிமன்றம் வழங்கிய அந்த தீர்ப்பில், ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்ததோடு, அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கியுள்ளது. மேலும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக உடனடியாக அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.

பாஜக எம்எல்ஏவும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி தான் ராகுல்காந்திக்கு எதிராக சூரத் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில் ஒட்டுமொத்த ‘மோடி’ சமூகத்தையும் ராகுல்காந்தி இழிவுபடுத்தி விட்டதாக எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி கூறியிருந்தார். இது குறித்து குற்றவியல் நீதித்துறை தலைமை நீதிபதி எச்.எச்.வர்மா இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.மோடி குடும்பப் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக, தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com