தொடரும் பணிநீக்கம்... கவலையில் ஊழியர்கள்!
கம்ப்யூட்டர் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் அமெரிக்காவின் பிரபலமான டெல் நிறுவனம் தனது 6650 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை ஊழியர்களுக்கு விரைவில் வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் பரவியுள்ளது
பொருளாதார நெருக்கடி காரணமாக, மைக்ரோசாஃப்ட் முதல் அமேசான் வரை பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு மற்றும் பனி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், கணிப்பொறி சந்தையில் முன்னணி இடம் வகித்து வரும் டெல் நிறுவனமும் 6 ஆயிரத்து 650 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.அதன் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களில் 5 சதவீதம் பேர் என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிறுவனங்கள் பட்டியலில் டெல் நிறுவனமும் இணைந்துள்ளது.

இதற்கு முன்பு கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டிய போது டெல் 2020ல் இதேபோன்ற லாக்டவுன் அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் பர்சனல் கம்ப்யூட்டர் ஏற்றுமதிகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தொழில்துறை ஆய்வு நிறுவனமான ஐடிசி தெரிவித்துள்ளது.
ஐடிசி தரவுகள் படி, 2021 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் பர்சனல் கம்ப்யூட்டர் பிரிவில் இருக்கும் பெரிய நிறுவனங்களான டெல் 37 சதவீத வர்த்தகப் பாதிப்பை சந்தித்துள்ளது. டெல் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 55 சதவீதத்தைப் பர்சனல் கம்ப்யூட்டர் பிரிவு விற்பனையில் இருந்து பெறுகிறது.
தொழிலாளர்களுக்கு இணை தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் கிளார்க் எழுதியுள்ள கடிதத்தில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலம் குறித்த நிச்சயத்தன்மை இல்லாத நிலையில் பயணத்தைக் குறைப்பது, ஆட்கள் தேர்வை நிறுத்துவது போன்ற ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை போதுமானதாக இல்லை என்பதால், ஆட்குறைப்பில் ஈடுபடுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.