கேரி பேகுக்கு 4 ரூ தர மறுத்து நுகர்வோர் தொடுத்த வழக்கில் ரூ 5000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

கேரி பேகுக்கு 4 ரூ தர மறுத்து நுகர்வோர் தொடுத்த வழக்கில் ரூ 5000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

கொல்கத்தாவில் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் கேரி பேகிற்கு 4ரூபாய் வசூலித்ததை எதிர்த்து வாடிக்கையாளர் ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். நான்கு ஆண்டுகால சட்டப்போராட்டத்திற்குப் பிறகு அந்த வழக்கு ஒருவழியாக இரண்டு நாட்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. கொல்கத்தாவில் உள்ள நுகர்வோர் மாவட்ட குறைதீர் மன்றம் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.5,000 மற்றும் வழக்கு நடத்திய செலவாக ரூ.2,000 வழங்க அந்தக் கடை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

டிபார்ட்மென்ட் ஸ்டோர் மனுதாரரிடம் இருந்து கேரி பேக்கிற்கு ரூ.4 வசூலிப்பது சட்டப்படி செல்லாது என்று மன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. நவம்பர் 2019 இல், சுராஜித் கான்ரா தெற்கு கொல்கத்தாவில், பெஹாலாவில் உள்ள பர்னாஸ்ரீயில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விஜயம் செய்தார். ஷாப்பிங் முடிந்து பேமென்ட் கவுன்டர் முன்பு அவர் திரும்பியபோது, ஒரு கேரி பேக்கிற்கான கட்டணமாக ரூ.4 அவரது பில்லில் சேர்க்கப்பட்டிருப்பதைக் கண்டார். கேரி பேக்கில் டிபார்ட்மெண்டல் ஸ்டோரின் சின்னம் இருந்ததால் கான்ரா எதிர்ப்பு தெரிவித்தார்.

சின்னம் இல்லாத பையை கேட்டார். ஆனால் அந்த நபர் கான்ராவின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது. கான்ரா பின்னர் நுகர்வோர் நீதி மன்றத்தை அணுக முடிவு செய்தார். நீதிமன்ற விசாரணையின் போது, கான்ரா, வாடிக்கையாளர்கள் விரும்பவில்லை என்றால், எந்தவொரு டிபார்ட்மென்ட் ஸ்டோரும் அவரை கேரி பேக்குகளை வாங்கும்படி வற்புறுத்த முடியாது என்றார். அதே நேரத்தில், டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அல்லது கடையின் லோகோவுடன் கேரி பேக்கை விற்கவும் முடியாது என்று வாதிட்டார்.

அதற்கு பதிலளித்த டிபார்ட்மென்டல் ஸ்டோரின் பிரதிநிதி, கான்ரா எந்த பையையும் எடுத்துச் செல்லவில்லை என்றும், அவர் வாங்கிய பொருட்கள் அவரது முகவரிக்கு அனுப்பி வைக்க்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால் இந்த பதிலில் திருப்தி அடையாத கமிஷன், இப்போது மட்டும் 4 ரூபாய்க்கு மேல் விலையுள்ள பொருட்களை வழங்குவதாக எப்படி டிபார்ட்மென்டல் ஸ்டோர் உறுதியளிக்கிறது என்று கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த ஸ்டோர் தரப்பு, மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதற்கு மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும், அதனால்தான் அரசின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க கட்டணம் விதிக்கப்படுவதாகவும் பதிலளித்தது. பெஞ்சில் இருந்த நீதிபதிகள் டிபார்ட்மென்ட் ஸ்டோரின் தர்க்கத்தில் மகிழ்ச்சியடையவில்லை. விசாரணையின் போது நீதிபதிகளில் ஒருவர், கடை நிர்வாகம் ஏன் காகிதப் பைகளை அறிமுகப்படுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com