நாய்க்கு பயந்து மாடியில் இருந்து குதித்த டெலிவரி பாய் கவலைக்கிடம்!

நாய்க்கு பயந்து மாடியில் இருந்து குதித்த டெலிவரி பாய் கவலைக்கிடம்!

தெலுங்கானா மாநிலம் மணிகொண்டாவில் பஞ்சவடி காலனியில் பெண் வாடிக்கையாளர் ஒருவருக்காக இ -காமர்ஸ் நிறுவனமொன்றில் டெலிவரி பாயாகப் பணியாற்றும் இல்லியாஸ் என்பவர் மெத்தை ஒன்றை டெலிவரி செய்யச் சென்றிருந்தார்.

அதற்காக ஞாயிறு அன்று மதியம் 30 வயது இல்லியாஸ் லிஃப்டில் மூன்றாவது மாடியில் இருந்த தனது வாடிக்கையாளரின் வசிப்பிடத்தை அடைந்தார்.

அங்கு வீட்டின் கதவு திறந்திருக்கவே, மெத்தையை உள்ளே கொண்டு செல்லும் பொருட்டு இல்லியாஸ் மெத்தையை உள்ளே வைத்து பக்கவாட்டில் திருப்பிய போது திடீரென்று வீட்டுக்குள் இருந்து நாய் குரைக்கத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியில் பீதியான இலியாஸ் நாயிடம் இருந்து தப்ப வேண்டி அறைக்கு வெளியே வந்து மாடிப்படி கைப்பிடி வழியாக சருக்கி விழத் தொடங்கினார். அவர் மாடிப்படி கைப்பிடியில் தொங்குவதைப் பார்த்த வாடிக்கையாளர் விரைந்து வந்து அவரைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் அந்தப் பெண் வாடிக்கையாளர் இல்லியாஸை மேலே இழுக்க முயன்ற போதிலும், முயற்சி பலனின்றி இல்லியாஸ் வழுக்கி தரையில் விழுந்தார்.

இதைக் கண்டு அத்ர்ச்சி அடைந்த பெண் வாடிக்கையாளர் மற்றும் அந்தக் கட்டிடத்தில் இருந்த மேலும் சிலரும் இணைந்து இல்லியாஸை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால்,மேலிருந்து கீழே விழுந்ததில் இல்லியாஸுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததால், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து அபார்ட்மெண்ட் வாசிகளோ அல்லது பாதிக்கப்பட்ட இல்லியாஸ் தரப்பில் இருந்தோ யாரும் வந்து காவல்துறையில் புகார் எதுவும் பதிவு செய்யவில்லை என்றாலும் இந்தச் செய்தி உள்ளூரில் பரவியதையடுத்து இந்தச் சம்பவம் குறித்த தகவல் காவல்துறைக்கு சென்றது.

அதனையடுத்து , போலீஸ் ரோந்து குழு விசாரணை நடத்த அபார்ட்மெண்ட் வந்து பின்னர் இல்லியாஸ் குடும்பத்தினரிடம் வாக்குமூலம் பெற்றது. அடுத்ததாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com