69 வது திருமணம்
69 வது திருமணம்

விவாகரத்துக்கு 59 வயதில் மனு.. 69 வயதில் அதே மனைவியுடன் மீண்டும் திருமணம்!

கர்நாடக மாநிலத்தில் 59 வயதில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நபர், 10 வருடங்கள் கழித்து தன் 69-வது வயதில் அதே மனைவியை லோக் அதாலத் வாயிலாக நீதிமன்ற வளாகத்தில் கரம் பிடித்த நபர். சுவாரஸ்யம் ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் துமகூரு குடும்ப நல நீதிமன்றத்தில் நேற்று லோக் அதாலத் நிகழ்ச்சியின்போதுதான் இந்த கலகலப்பான சம்பவம நடைபெற்றது.

இதில் பல வருடங்களாக நிலுவையில் உள்ள விவாகரத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டபோது 69 வயது நபர் 10 வருடங்களாக நடைபெற்று வந்த தனது விவாகரத்து வழக்கை முடித்துக் கொண்டு மீண்டும் தனது மனைவியின் கரத்தை கைப்பற்றியுள்ளார்.

அவர் 10 வருடங்களுக்கு முன்பு சிறு காரணத்தினால் மனைவியிடம் சண்டை இட்டு பிரிந்து, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். அவரது மகள் வழி பேரன் பேத்திக்கு இப்போது  15 வயதாகிறது.

அவர்கள் தங்களது தாத்தா பாட்டியை சமாதானம் செய்த நிலையில் இன்று லோக் அதாலத்தில் தனது வழக்கை திரும்ப பெறுவதாக அறிவித்து நீதிபதி கீதா முன்பு தனது மனைவிக்கு மாலையிட்டு இனிப்பு வழங்கி மீண்டும் அவரது கரத்தை பற்றியுள்ளார்.

இதே போல மொத்தமாக ஐந்து தம்பதியினர் இன்று தங்களது விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்று மீண்டும் இணைந்துள்ளனர். இன்று இணைந்த அனைத்து ஜோடிகளும் நீதி அரசர் கீதா அவர்களுடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது. 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com