பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஏசி-யை 17 டிகிரி செல்சியசுக்கு வைக்காதீங்க; பிரதமர் மோடி கோரிக்கை!

 சர்வதேச அளவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் 'மிஷன் லைஃப்' எனும் சர்வதேச செயல் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

குஜராத்தின் கோவாடியாவில் நடைபெற்ற விழா ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ விழாவில்  ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கலந்து கொண்ட நிலையில், அவருடன் இணைந்து இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அதைடுத்து பிரதமர் மோடி, ‘’சர்வதேச அளவில் 'பருவநிலை மாற்றம் பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது. இதனை எதிர்கொள்ள 'மிஷன் லைஃப்' திட்டம் கைகொடுக்கும். அதன் ஒரு பகுதியாக வீடுகளில் பிரிட்ஜ் மற்றும் ஏசி பயன்பாட்டை சரியான அளவில் மேற்கொள்ள வேண்டும்.

சிலர் வீடுகளில் மிகவும் குளிர்ச்சியாக இருக்க வேண்டி, ஏசியின் வெப்பநிலையை 17 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வைக்கின்றனர். இது சுற்றுச்சூழலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும், ஆகவே இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்’’

அதனையடுத்து ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் பேசும்போது, ‘’சர்வதேச பருவநிலை மாற்றத்தில் இருந்து உலகை பாதுகாக்க ஒருமித்த பங்களிப்பு நமக்குள் அவசியம்'' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ், மாலத்தீவு, மடகாஸ்கர் போன்ற நாடுகளின் அதிபர்களும், பிரிட்டன், ஜார்ஜியா, எஸ்டோனியா உள்ளிட்ட நாடுகளின் பிரதமர்களும் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர். அதன்பின் குஜராத்தின் வியாரா என்ற இடத்தில் 1,970 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com