டபுள்-டெக்கர் பஸ்
டபுள்-டெக்கர் பஸ்

மும்பையில் விரைவில் வரப் போகுது டபுள்-டெக்கர் பஸ்!

மும்பையில் டபிள்-டெக்கர் எனப்படும் இரண்டு அடுக்கு மின்சார பேருந்து சேவையானது வருகிற ஜனவரி14-ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு, பிரிஹன் மும்பை மின்சார விநியோகம் மற்றும் போக்குவரத்து நிறுவனம் (பெஸ்ட்) பேருந்து சேவை வழங்கி வருகிறது. 400-க்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகள் உட்பட சுமார் 3,500 பேருந்துகளை இந்த நிறுவனம் இயக்கி வருகிறது. இந்நிறுவனத்தின் பொது மேலாளர் லோகேஷ் சந்திரா நேற்று மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

மும்பையில் இரண்டு அடுக்கு மின்சாரப் பேருந்து ஜனவரி14-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. முதலில் 10 பேருந்துகளுடன் தொடங்கப்படும் இந்த சேவை, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, குறைந்தபட்சம் 50 பேருந்துகளாக இயக்கப்படும். மேலும் இந்த மாதம் பிரீமியம் ஒற்றை அடுக்கு மின்சார பேருந்து சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதில் பயணிகள் தங்கள் இருக்கைகளை செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

 -இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com