டாக்டர் சி.வி.ஆனந்த போஸ்
டாக்டர் சி.வி.ஆனந்த போஸ்

மேற்கு வங்க ஆளுநராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் இன்று பதவியேற்பு!

மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் இன்று பதவியேற்றார். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான டாக்டர் சி.வி.ஆனந்த போஸ், தற்போது மேகாலயா மாநில அரசின் ஆலோசகராக உள்ளார்.

மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தங்கர் நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டதையடுத்து மணிப்பூர் ஆளுநரான இல.கணேசனை மேற்குவங்கத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றார்.  இந்நிலையில் மேற்குவங்கத்துக்கு புதிய ஆளுநராக டாக்டர் சி.வி.ஆனந்தபோசை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.

கேரளாவின்  மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான சி.வி.ஆனந்தபோஸ், மேற்குவங்க ஆளுநராக அறிவிக்கப்பட்டதும் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘‘என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கியதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்குவங்க மக்களுக்கு பயன்படும் விஷயங்களை முன் நின்று நடத்த முயல்வேன். மேற்கு வங்கத்தில் மாநில அரசுடன் மோதும் எண்ணம் இல்லை’’ என கூறினார். இந்நிலையில் இன்று அதிகாரபூர்வமாக மேற்குவங்க ஆளுநர் பொறுப்பை சி.வி. ஆனந்தபோஸ் ஏற்றார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com