டிரோன்கள்
டிரோன்கள்

மும்பையில் டிரோன்கள் பறக்க விட தடை!

மும்பையில் அடுத்த 30 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாளிந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ், இந்த தடை உத்தரவை மும்பை காவல்துறை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு நவம்பர் 13-ம் தேதி முதல் டிசம்பர் 12-ம் தேதிவரை அமலில் இருக்கும் என்று தெரிவித்த மும்பை காவல்துறை, மேலும் இதுகுறித்து தெரிவித்ததாவது:

மும்பையில்  ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி
பயங்கரவாத செயல்களில் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தல் காரணமாக அடுத்த 30 நாட்களுக்கு பிரஹன் மும்பை போலீஸ் கமிஷனரேட் பகுதியின் அதிகார வரம்பில் உள்ள பகுதிகளில், டிரோன்கள் மற்றும் ரிமோட்-கண்ட்ரோல் மூலம் இயங்கக்கூடிய அல்லது மைக்ரோ-லைட் விமானம், பலூன்கள் மற்றும் தனியார் ஹெலிகாப்டர்கள் ஆகியவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com