குடிபோதையில் ரயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர்!

குடிபோதையில் ரயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர்!

குடிபோதையில் இருந்த ரயில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர், ரயிலில் பெண் பயணியின் தலையில் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே போலீஸை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ. இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது மார்ச் 12 ஆம் தேதி அகால்தக்த் எக்ஸ்பிரஸ் ரயில், அமிருதரஸிலிருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த்து.

அமிருதசரஸைச் சேர்ந்த ஒரு பெண், தனது கணவர் ராஜேஷ்குமாருடன் கொல்கத்தாவுக்கு செல்ல அந்த ரயிலின் ஏ-1 பெட்டியில் ஏறி தங்கள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தனர்.

அமிருதசரஸிலிருந்து கொல்கத்தா செல்லும் அந்த ரயிலில் முன்னா குமார் என்பவர் டிக்கெட் பரிசோதகராக இருந்தார். பிகாரைச் சேர்ந்த அவர் நல்ல குடிபோதையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. நள்ளிரவில் அந்த ரயில் லக்னெளவை சென்றடையும் முன்பு குடிபோதையில் இருந்த டிக்கெட் பரிசோதகர், அந்த பெண்ணின் தலையில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. டிக்கெட் பரிசோதகரின் செயலைக்கண்டு அந்த பெண் கூச்சல் போடவே, அந்த ரயிலில் பயணம் செய்த மற்ற பயணிகள் விழித்துக் கொண்டனர். பின்னர் நடந்த விஷயத்தை அறிந்ததும் அவரை பிடித்துவைத்து கொண்டனர். ரயில் லக்னெளவில் சார்பாக் ரயில்நிலையத்தை அடைந்ததும் அந்த டிக்கெட் பரிசோதகரை ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவரை திங்கள்கிழமை காலை நீதிமன்ற காவலில் வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விமானத்தில் குடிபோதையில் ஒரு பயணி மற்றொரு பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் இரண்டு நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரயிலில் பெண் பயணி மீது டிக்கெட் பரிசோதகரே சிறுநீர் கழித்த சம்பவம் நடந்துள்ளது.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு விமானத்தில் குடிபோதையில் பயணம் செய்த ஒருவர் சக பயணி மீது சிறுநீர் கழித்தார். நியாயூர்க்கிலிருந்து தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பவர் மூத்த பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் நடந்த்து. உடனடியாக கைது செய்யப்பட்ட அவர் இப்போது ஜாமீனில் இருக்கிறார்.

மற்றொரு சம்பவத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நியூயார்க்கிலிருந்து தில்லி வந்த ஒரு இளைஞர், சக பயணி மீது சிறுநீர் கழித்த்து குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com