இந்தியாவில் மின்சார வாகன விற்பனை ஓஹோ!

இந்தியாவில் மின்சார வாகன விற்பனை ஓஹோ!

டப்பு நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் 7.3 லட்சம் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. ஒட்டுமொத்த மின்சார வாகனங்கள் விற்பனை என்று பார்க்கும்போது 11,52,021 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகள், கார்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அடங்கும். இதனை மின் வாகன உற்பத்தியாளர் சங்கம் உறுதி செய்துள்ளது.

இப்படி மின்சார வாகன விற்பனை உயர்வுக்கு, மின் வாகனம் சார்ந்த விழிப்புணர்வு, மலிவான விலை மற்றும் அதற்கான அணுகுமுறைதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பவிஷ் அகர்வால் அண்மையில் ஒரு நேர்காணலின்போது பேசுகையில், “மின்சார வாகனத்தின் எதிர்காலம் என்பது தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கும். அதை இரண்டு அல்லது மூன்று என வரையறுக்க முடியும். அதில் ஒன்று மென்பொருள். மற்றொன்று ஆற்றல் (எனர்ஜி) அல்லது செல் சார்ந்து இருக்கும். இந்த இரண்டிலும் நாங்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளோம். அதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். இதன் மூலம் விநியோக சங்கிலி சார்ந்து ஒரு தளத்தைக் கட்டமைத்து வருகிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த மின்சார வாகன விற்பனை வரும் 2030க்குள் இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன விற்பனை சந்தையாக இந்தியா திகழ்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 16 மில்லியன் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது இந்தியாவில் மின்சார இரு சக்கர வாகனத்துக்கான சந்தை வாய்ப்பு மிகவும் ஆரோக்கியமாகவும், நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com