
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 17-வது வெளிநாடு வாழ் இந்திய தின விழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த மாநாடு மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 70 நாடுகளில் இருந்து 3500 வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியுடன் மத்திய பிரதேச மாநில முதல் சிவராஜ் சிங் செளகான், மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த உலகமே ஒரே நாடு தான். அனைத்து மக்களும் நம் சகோதரர்கள் தான். இது நம் முன்னோர்களால் கலாச்சார ரீதியில் வடிவமைக்கப் பட்டது. நாட்டு மக்கள் சார்பாக உங்களை வரவேற்கிறேன்.
ஒவ்வொரு வெளிநாடு வாழ் இந்தியரும் இந்தியாவின் தூதர் என்றே அழைப்பேன். இந்தியாவின் தூதராக உங்கள் மாறுபட்டது. நீங்கள் மேக் இன் இந்தியாவின் தூதர்கள். இந்தியாவின் குறு,சிறூ தொழிகள், கைவினை பொருட்கள் ஆகியவற்றின் தூதர்கள். வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பை ஆராய்ந்தால் இந்தியா எவ்வளவு வலிமையான மற்றும் திறமையான நாடு என்பது புரியும். இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் முன்னணியில் உள்ளது. இந்தியா உலகின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்” என்று இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.