‘’தேர்தலில் சீட் கொடுக்கலைன்னா..”; முன்னாள் கவுன்சிலர் மிரட்டல்!

ஹசீப் உல் ஹசன்
ஹசீப் உல் ஹசன்

டெல்லி மாநகராட்சி தேர்தலில் தனக்கு சீட் கொடுக்காவிட்டால், கீழே குதித்து விடுவதாகக் கூறி, மின்சார டவர் மீது ஏறி ஆம் ஆத்மி கவுன்சிலர் மிரட்டல் விடுத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில்  வருகிற டிசம்பர் 4-ம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி மற்றும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே போட்டி நிலவி வருகிறது.

இதையொட்டி ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் 250 உறுப்பினர்களை கொண்ட டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை  (நவம்பர் 11) முதற்கட்டமாக 134 வேட்பாளர்களை கொண்ட பட்டியலை வெளியிட்டார். அதற்கடுத்து மறுநாள் மேலும் 117 வேட்பாளர்களை கொண்ட 2-வது பட்டியலை வெளியிட்டார்

இந்நிலையில் இந்த வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததால் டெல்லியின் முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலரான ஹசீப் உல் ஹசன் என்பவர் டெல்லியில்  பார்க் மெட்ரோ ரயில் நிலையம் அருகேயுள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து, உடனடியாக  சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து, மின்சார டவரிலிருந்து  கீழே இறங்கச் செய்தனர். இச்சம்பவம் குறித்து அவர்மீது வழக்கு பதிவு செய்து வார்னிங் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com