பெண் குழந்தைகளின் பள்ளி இடைநிற்றல் விகிதம் எந்த மாநிலத்தில் அதிகம் என்று பாருங்கள்!

பெண் குழந்தைகளின் பள்ளி இடைநிற்றல் விகிதம் எந்த மாநிலத்தில் அதிகம் என்று பாருங்கள்!

மேற்கு வங்காளத்தின் 15 முதல் 24 வயதுடைய பெண்களில் பாதிப் பேர் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டு, தொழில் பயிற்சி இல்லாமல் வீட்டில் இருக்கிறார்கள். மத்திய அரசின் ஒரு கணக்கெடுப்பில், இந்தப் பெண்கள் தங்கள் கல்வியை முடிப்பதற்கு அல்லது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் தேவையான பொருளாதாரத்தை அடைய சம்பாதிப்பதற்காக திறன் சார்ந்த பயிற்சி படிப்புகளை மேற்கொள்வதற்குப் பதிலாக வீடுகளில் வேலை செய்கிறார்கள் எனும் உண்மை வெளிப்பட்டிருக்கிறது.

மேற்கு வங்காளத்தில் இதுபோன்ற பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 49.9 சதவீதமாக இருக்கும் போது, நாட்டில் 43.8 சதவீதமாக உள்ளது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2020 ஜனவரி முதல் டிசம்பர் வரை தேசிய மாதிரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்தது, ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக காலக்கெடு டிசம்பர் 2021 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது 2021 ல் மேற்கொள்ளப்பட்ட அந்த கணக்கெடுப்பில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் வீட்டில் அமர்ந்திருக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என தெரிய வந்திருக்கிறது.

கல்வியாளர்களின் கூற்றுப்படி, கோவிட் தொற்றுநோய் காரணமாக பல பெண்கள் மற்றும் சிறுவர்கள் பள்ளியை விட்டு வெளியேறி புலம்பெயர்ந்தவர்களாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களில் பலர், மாநில அரசாங்கத்தின் கன்யாஸ்ரீ திட்டத்தின் கீழ் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கென ஒரு முறை வழங்கப்படும் மானியத்தைப் பெற்று கொண்டு மிகக் குறைந்த வயதிலேயே திருமணம் செய்விக்கப்பட்டு வேறு இடங்களுக்கு சென்றிருக்கலாம் என்றும் அந்த கணக்கெடுப்பில் தெரிய வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை மேற்கு வங்கத்தில்தான் அதிகம் என்று கண்டறியப் பட்டிருந்தது. அப்படிப்பட்ட 100 பெண்களில் 45 பேர் 21 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது கவலைக்குரிய விஷயம்.

அரசின் கன்யாஸ்ரீ திட்டம் என்பது, 25 வயதை பூர்த்தி செய்து, ஆண்டுக்கு ரூ.1,20,000 வரை வருமானம் ஈட்டும் குடும்பங்களில் இருந்து வரும் பெண்களுக்கு மத்திய அரசு ஒரு முறை மட்டுமே ரூ.25,000 ஐ மானியமாக வழங்கும் செயல்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு பெண் முழுமையாக தன் பெற்றோரை இழந்தாலோ அல்லது உடல் ஊனமுற்றாலோ (40 சதவீத ஊனம்) அல்லது சிறார் நீதி இல்லத்தின் கைதியாக இருந்தாலோ, மேற்சொன்ன குடும்ப வருமானத் தடை பொருந்தாது. அவர்களுக்கு அதிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படுகிறது. இதுதான் கன்யாஸ்ரீ திட்டத்தின் நோக்கம்.

ஆனால், மேற்கு வங்கத்தில் இந்த திட்டம் சரியானபடி நிஜமான காரணங்களுக்காக செயல்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அங்கு இதன் காரணமாக பணம் கிடைக்கும் என்பதால் போலி ஆவணங்கள் மூலமாக பெண் குழந்தைகளின் வயதை அதிகரித்துக் காட்டி அரசிடம் இருந்து மான்யத் தொகை பெறப்பட்டு திருமணங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதனால் தான் பெண் குழந்தைகளின் கல்வி விகிதமானது மற்ற எந்த மாநிலங்களைக் காட்டிலும் இங்கு அதலபாதாளத்தில் இருக்கிறது என்று அந்தக் கணக்கெடுப்பு காட்டுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com