Food delivery
Food delivery

உணவு டெலிவரி லேட்: ஆரத்தி எடுத்து வரவேற்ற நபர்!

Published on

டெல்லியில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த உணவு வகைகளை தாமதமாக டெலிவரி செய்த இளைஞருக்கு அந்த வாடிக்கையாளர் ஆரத்தி எடுத்து வரவேற்ற வீடியோ வைரலாகியுள்ளது.

டெல்லியை சஞ்சீவ் தியாகி என்பவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் சோளா பூரிக்கு ஆர்டர் செய்தார். ஆனால் அன்று கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக, உணவு டெலிவரி இளைஞர் ஒரு மணி நேரம் தாமதமாக அந்த உணவு பார்சலைக் கொண்டு வந்துள்ளார். இதற்கு கொஞ்சமும் கோபம் அடையாமல், தாமதமாக உணவு சப்ளை செய்த அந்த இளைஞரை,  சஞ்சீவ் தியாகி ஆரத்தி எடுத்து வரவேற்று,அவரது நெற்றியில் திலகமிட்டார்.

மேலும் 'வாங்க.. சார்.. வாங்க..  உங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன்' என்ற அர்த்தம் உள்ள இந்தி சினிமா பாடலையும் பாடினார். மேலும் இதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட, தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com