Arvind Kejriwal
Arvind Kejriwal

அயோத்திக்கு இலவச ரயில்: குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி!

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஜெயித்தால், அம்மாநில மக்கள் அயோத்திக்கு சென்று வர இலவச ரயில் விடப்படும் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற்வுள்ள நிலையில்,  அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அங்குள்ள தாஹோத் பகுதியில் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கெஜ்ரிவால் தெரிவித்ததாவது;

டெல்லி அரசு ராம பக்தர்களுக்காக அயோத்தி வரை இலவச சிறப்பு ரயில் திட்டத்தை நடத்தி வருகிறது. அயோத்தி சென்று டெல்லி திரும்பிய ராம பக்தர்கள் என்னை மனதார ஆசிர்வதிக்கின்றனர்.

அடுத்தாண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோயில் முழுமையாக தயாராகிவிடும். எனவே, குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், நாங்கள் அயோத்திக்கு இலவச ரயில் சேவையும் இலவச தரிசன திட்டத்தையும் செயல்படுத்துவோம்.

 -இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com