ஜி-20 நிதி கூட்டம்
ஜி-20 நிதி கூட்டம்

ஜி-20 முதலாவது நிதி கூட்டம்: பெங்களூருவில் இன்று தொடக்கம்!

ஜி-20 அமைப்பின்  முதலாவது நிதி மற்றும் மத்திய அரசின் வங்கி பிரநிதிகள் கூட்டம் இன்று பெங்களூரில் துவங்குகிறது.

ஜி- 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதை தொடர்ந்து ஜி 20 நிதி மற்றும் மத்தியா அரசு வங்கி  பிரதிநிதிகள்  கூட்டம் பெங்களூரில் இன்று தொடங்கி 15-ம் தேதி வரை நடக்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து தெரிவித்ததாவது;

 ஜி 20 நாடுகளில் முதலாவது நிதி மற்றும்  வங்கி பிரதிநிதிகளின்  கூட்டத்தில் மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அஜய் சேத் , ரிசர்வ் வங்கி துணைஆளுநர் டாக்டர் மைக்கேல் டி. பத்ரா ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.

இந்தக் கூட்டத்துக்கு ஜி- 20  நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்து பங்கேற்கின்றனர். இதையொட்டி நாடு முழுவதும்  200-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள  வரும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளை மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா,மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் அழைத்து செல்லப் படுவார்கள் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com