கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் நேர்காணல் சிறையில் பதிவு செய்யப்படவில்லை: பஞ்சாப் சிறைத்துறை!

கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் நேர்காணல் சிறையில் பதிவு செய்யப்படவில்லை: பஞ்சாப் சிறைத்துறை!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள எந்த சிறையில் இருந்தும் கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் நேர்காணல் செய்யப்படவில்லை என்று பஞ்சாப் சிறைத்துறை மறுத்துள்ளது.

சிறைச்சாலையில் ஜாமர்கள் இருப்பதால், செல்போன்கள் வேலை செய்ய முடியாததால், சிறையிலிருந்து நேர்காணல் சாத்தியமில்லை என்று சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பஞ்சாபி பாடகர் சுப்தீப் சிங் அக்கா சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான லாரன்ஸ் பிஷ்னோய் என்ற பயங்கரவாதி பாடிண்டா சிறையில் இருந்து தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி ஒளிபரப்பப்பட்ட பின்னர் அது குறித்து கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில் அதன் எதிரொலியாக அந்த குற்றச்சாட்டை மறுத்து பாடிண்டா சிறைத்துறை தன்னிலை விளக்கமாக மேற்கண்ட பதிலை பதிவு செய்துள்ளது.

பேட்டியில், பஞ்சாபி பாடகர் மூஸ் வாலா கொலையில் பிஷ்னோய் தனது பங்கை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மற்றொரு குண்டர் கும்பல் சதீந்தர்ஜித் சிங் என்ற கோல்டி ப்ரார் மற்றும் அவரது உறவினர் சச்சின் பிஸ்னோய் ஆகியோருடன் சேர்ந்து மூஸ்வாலாவைக் கொல்ல திட்டம் தீட்டப்பட்டது என்றும் அவர் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்ததாகவும் அவர் கூறினார். விக்கி மிதுகேரா மற்றும் குர்லால் பிரார் ஆகியோரின் கொலைக்கு பழிவாங்கவே அவரது கொலை நிகழ்த்தப்பட்டது என்றும் லாரன்ஸ் பிஷ்னோய் அந்த நேர்காணலில் தெரிவித்ததாகத் தகவல். இந்த நேர்காணல் நடந்த இடம் வீடியோவில் தெளிவாக இல்லை.

தனியார் சேனலில் இந்த நேர்காணல் ஒளிபரப்பப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, பஞ்சாப் கைதிகள் துறை, மாநிலத்தில் உள்ள எந்த சிறையிலும் இதுபோன்ற நேர்காணல் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று மறுத்துள்ளது.

இதுகுறித்து மாநில சிறைத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒரு தனியார் தொலைக்காட்சி, சிறைக்குள் இருந்து கைதி லாரன்ஸ் பிஷ்னோயின் பேட்டியை ஒளிபரப்பியது கவனத்திற்கு வந்துள்ளது. பாடிண்டா சிறைச்சாலைக்குள் இருந்து அந்தப் பேட்டி பதிவு செய்யப்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. இந்த வதந்திகள் ஆதாரமற்றவை என்பதையும், இந்த வீடியோ தற்போது கைதி அடைக்கப்பட்டுள்ள பாடிண்டா சிறையிலோ அல்லது பஞ்சாபில் உள்ள வேறு எந்த சிறையிலோ இருந்து எடுக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துவதற்காகவே சிறைத்துறை இந்த விளக்கத்தை வெளியிடுவதாகக் கூறியது.

"இந்தக் கைதி தற்போது பாடிண்டா சிறையின் உயர் பாதுகாப்பு மண்டலத்தில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது, அங்கு அவரது நடவடிக்கைகள் 24×7 கடுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் சிறை நிர்வாகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் போலிச் செய்திகளைப் பரப்பியவர்கள் யாராவது சிக்கினால், சட்டப்படி அவர்கள் மீது கடும்மையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றும் அந்த செய்திக் குறிப்பு தெரிவித்தது.

ஜெய்ப்பூரில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குக்காக பிஷ்னோய் பிப்ரவரி 15 ஆம் தேதி பாடிண்டா சிறையில் இருந்து ராஜஸ்தானுக்கு புரொடக்ஷன் வாரண்டின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், மார்ச் 10 ஆம் தேதி மீண்டும் பாடிண்டாவிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com