திருமணத்துக்கு முன் விபத்துக்குள்ளான பெண்ணுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய மாப்பிள்ளை!

திருமணத்துக்கு முன் விபத்துக்குள்ளான பெண்ணுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய மாப்பிள்ளை!

திருமணத்துக்கு முன் மகப்பேறியல் பிஸியோதெரபிஸ்டான ஷடாக்க்ஷி என்ற பெண் விபத்தில் சிக்கினார். அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை பிரதீக், அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பும்வரை கண்போல் பார்த்துக் கொண்டார். இது தொடர்பான விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

ஷடாக்க்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த கதையை பகிர்ந்துகொண்டிருந்தார். இது தொடர்பான விடியோவையும் வெளியிட்டிருந்தார். பிரதீக் என்னை பெண் பார்த்துவிட்டு போனபிறகு நான் ஒரு விபத்தில் சிக்கினேன். எனக்கு காலில் அடிபட்டது. நான் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த செய்தி அறிந்த பிரதீக், மருத்துவமனையிலேயே தங்கி என்னை நன்றாக கவனித்துக் கொண்டார். எனக்கு ரத்தம் தேவைப்பட்டபோது தனது ரத்தத்தை நன்கொடையாக அளித்தார். சிகிச்சை பெற்றுவந்தபோது அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து பார்த்துவிட்டுச் சென்றார்.

விபத்து நடந்த இரண்டு மாதத்தில் எனது காலில் போடப்பட்டிருந்த பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பிரிக்கப்பட்டது. அதன் பின் எனக்கும் அவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து ஒன்றரை மாதத்தில் எங்களுக்கு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்குப் பின் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தம்மை புதுமாப்பிள்ளை பிரதீஷ், தூக்கிக்கொண்டு சுற்றிவரும் படத்தையும் ஷடாக்க்ஷி விடியோவாக வெளியிட்டிருந்தார்.

எங்களது கதையை கேட்ட உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி. உங்கள் அன்பும் ஆசிகளும் எங்களுக்குத் தேவை.

தாங்க்யூ என்றும் பிரதீக், ஷடாக்க்ஷி டுவிட்டர் மூலம் தெரிவித்திருந்தனர்.

கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியான இந்த விடியோவை இன்ஸ்டாகிராமில் 55,000 பேர் பார்வையிட்டுள்ளனர். நீங்கள் இருவரும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக உள்ளீர்கள். உங்களுக்கு எனது பாராட்டுகள் என்று ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

பிரதீக் பையா பள்ளி நாட்களிலிருந்து உனது செயல்பாடுகள் வியத்தக்க வகையில் உள்ளது. உனது செயல் எங்களுக்கு பெருமையாக உள்ளது என்று நண்பர் ஒருவர் கருத்து பதிவு செய்துள்ளார். திருமணமாகி புதிய பயணத்தை தொடங்கும் உங்களுக்கு எனது பாராட்டுகள் என்று மூன்றாமவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com