ஜி.எஸ்.டி. வசூலில் புதிய சாதனை! ஜனவரி மாதத்தில் ரூ.1,55,992 கோடி வசூல் - என்ன காரணம்?

ஜி.எஸ்.டி. வசூலில் புதிய சாதனை! ஜனவரி மாதத்தில் ரூ.1,55,992 கோடி வசூல் - என்ன காரணம்?

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ரூ.1,55,992 கோடி ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளது. இது இரண்டாவது அதிகபட்ச வசூலாகும்.

இது தொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.1.68 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டது. இந்த வசூல் இந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவு அதிகமாகும். இதற்கு அடுத்தபடியாக ஜனவரி மாதத்தில் அதிக அளவில் ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளது. மேலும் இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக ஜி.எஸ்.டி. ரூ.1.50 லட்சம் கோடியை கடந்துள்ளது.

இந்த மாதம் ஜனவரியில் வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி சென்ற ஆண்டில் இதே காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியைவிட 24 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31-1-2023 அன்று மாலை 5 மணி வரை வசூலிக்கப்பட்ட மொத்த ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1.55,992 கோடியாகும். இதில் ஜி.எஸ்.டி. ரூ.28,963 கோடி ரூபாயாகும். எஸ்.ஜி.எஸ்.டி. ரூ.36,730 கோடியாகும். ஐ.ஜி.எஸ்.டி. ரூ.79,599 கோடியாகும். (பொருள்கள் இறக்குமதி மூலம் கிடைத்த வருவாய் ரூ.37,118 கோடியும் இதில் அடங்கும்). செஸ் வரியாக ரூ.10,630 கோடியையும் (பொருள்களின் இறக்குமதி மூலம் கிடைத்த வருவாய் ரூ.768 கோடியும்) வருவாயாக பெற்றுள்ளது.

இதிலிருந்து ரூ.38,507 கோடியை சி.ஜி.எஸ்.டி.க்கும், ரூ.32,624 கோடியை எஸ்.ஜி.எஸ்.டி. மற்றும் ஐ.ஜி.எஸ்.டி.க்கும் தீர்வையாக செலுத்தப்பட்டுள்ளது. வழக்கமான தீர்வைக்கு பிறகு ஜனவரி மாதத்தில் மத்திய, மாநிலங்களின் மொத்த வருவாய் சி.ஜி.எஸ்.டி.க்கு ரூ.67,470 கோடியும், எஸ்.ஜி.எஸ்.டி.க்கு ரூ.69,354 கோடியும் வருவாயாகக் கிடைத்துள்ளது.

ஜி.எஸ்.டி. வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையும் 2.42 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் காலாண்டில் இந்த எண்ணிக்கை 2.19 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வரிவிதிப்புக் கொள்கைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள்தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com